விவசாயிகளின் நலனை காங்கிரஸ் புறக்கணிகிறது -மோடி!

விவசாயிகளின் நலனை காங்கிரஸ் முழுவதுமாக புறக்கணிகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! 

Last Updated : May 2, 2018, 11:38 AM IST
விவசாயிகளின் நலனை காங்கிரஸ் புறக்கணிகிறது -மோடி!  title=

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பாஜக காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது. 

இந்நிலையில், நேற்று முதல் பாரத பிரதமர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  நமோ ஆப் வழியாக விவசாயிகளிடம் பேசிய பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவசாயிகளின் பட்ஜெட் எனவும் விவசாயிகளின் நலனே எங்களின் முன்னுரிமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.    

இதை தொடர்ந்து பேசிய பிரதமர் விவசாயிகளின் நலனை காங்கிரஸ் முழுவதுமாக புறக்கணிகிறது என தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் விவசாயிகள் மத்தியில் வேறுபாடு காட்டி வருகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் நலனுக்காக எடியூரப்பா தனி கவனம் செலுத்துவார் எனவும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

2022-க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Trending News