மினி வேன் - லாரி மோதி விபத்து: 9 பேர் பலி!

சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலி! 

Last Updated : Apr 28, 2018, 09:49 AM IST
மினி வேன் - லாரி மோதி விபத்து: 9 பேர் பலி!  title=

உ.பி: சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதி விபத்துகுள்ளனத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்களை ஏற்றி செல்லும் மினி வேன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாகனத்தில் சுமார் 17 பேரை ஏற்றி சென்றுள்ளனர். இந்த விபத்தானது வாகனம் ஓட்டுனரின் அஜாக்கிரதை காரணமாக லாரி மீது மோதியது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் மீட்டுபுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்தில் காயமடைந்த நபர்களை அருகில் இருந்த மத்துத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News