கொரானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் சிவா... வைரலாகும் Video!

நாடுமுழுவதும் மக்கள் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், கொரோனாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் நடிகர் சிவா...

Last Updated : Mar 29, 2020, 04:18 PM IST
கொரானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் சிவா... வைரலாகும் Video! title=

நாடுமுழுவதும் மக்கள் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், கொரோனாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் நடிகர் சிவா...

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-தை தாண்டியுள்ளது. இந்த கொடிய தொற்று வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கையும் 25-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் 21 நாள் முழு அடைப்பிற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது, மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவிற்கு ஒத்துழைத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தங்கள் பங்கிற்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவா, கொரோனா குறித்து விழிப்புரண்வு ஏற்படுத்தும் விதமாக நகைச்சுவை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கொரோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் சிவா, "இனி மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், தூய்மையான சுற்றுபுறத்தை பாதுகாப்போம்" என வலியுறுத்துகிறார். குறிப்பாக இந்த வீடியோ கொரோனாவிற்கான வீடியோவாக இல்லாமல், மக்களுக்கான வீடியோவாக உள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Trending News