பீடியில் ராக்கெட்டுகளை ஏவும் பட்டாஸ் தாத்தா: வைரல் வீடியோ

பீடியில் பட்டாசுகளை ஏவும் தாத்தா ஒருவரின் வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 21, 2022, 11:55 AM IST
  • வாயில் வாண வேடிக்கை காட்டும் தாத்தா
  • பீடியில் சரவெடி வெடிக்கிறார்
பீடியில் ராக்கெட்டுகளை ஏவும் பட்டாஸ் தாத்தா: வைரல் வீடியோ title=

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் களை கட்ட தொடங்கியிருகிறது. ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் துணி எடுக்கவும், பட்டாசுகள் வாங்கவும் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூடவே இணையத்தில் தீபாவளி ரகளை வீடியோக்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றனர். எந்த கடையில் துணி வாங்கலாம், என்னென்ன புது பட்டாசுகள் வந்திருக்கிறது என தேடுபவர்கள் கண்ணில், தீபாவளி ரகளை வீடியோக்கள் கண்ணில் பட தவறுவதில்லை. அப்படியான வீடியோ ஒன்று நம்முடைய கண்ணிலும் பட்டது. அதுஎன்ன வென்றால், பீடியிலேயே ராக்கெட்டுகளை பற்ற வைத்து வாண வேடிக்கைகளை காட்டுகிறார் ஒரு தாத்தா.

மேலும் படிக்க | விஜய் பட தந்தையின் வைரல் வீடியோ - விமானத்தில் பெண்ணிடம் செய்த சேட்டையை பாருங்கள்!

பொதுவாக தீபாவளி வந்துவிட்டாலே இளைஞர்கள் சேட்டை அதிகமாக இருக்கும். கண்ட இடத்தில் பட்டாசு வைத்து ரகளை செய்வார்கள், சிலரை பயப்படுத்துவதற்காகவே பட்டாசுகளை சொல்லாமல் வைத்து வெடிப்பார்கள். சிலர் கையில் பிடித்து பட்டாசை தூக்கி வீசுவார்கள். இந்த விஷயங்களை பார்த்திருப்போம். அதுமட்டுமல்ல, குடிமகன்களின் சேட்டையையும் பார்க்கலாம். ஆனால், இங்கே வைரலாகியிருக்கும் வீடியோவில், தாத்தா ஒருவர் செய்யும் சேட்டை இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாயில் பீடி வைத்து புகைத்துக் கொண்டிருக்கும் அவர், கையில் கொத்தாக வாண வெடிகளை வைத்துக் கொண்டு, அந்த பீடியிலேயே பிடித்து வாண வேடிக்கை காட்டி வெடிக்கச் செய்கிறார். காண்போரை ரசிக்க வைக்கும் இந்த வீடியோவை மட்டும், டிவிட்டரிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்களில் சிலர், இவரை நாசா தேடிக் கொண்டிருப்பதாக கிண்டலடித்துள்ளனர். இவ்வளவு ஈஸியாக ராக்கெட் ஏவுபவரை விட்டுவிட்டு நாசா என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News