தம்பி... நீ ராஜாவா - அங்க ஓரமா போய் விளையாடு - சிங்கத்தை மிரட்டும் நீர்யானை

Hippo Lion Viral Video: குளத்தில் நீர் அருந்திக்கொண்டிருந்த சிங்கத்தை, நீர்யானை ஒரே அசைவில் மிரட்டும் அசத்தல் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2023, 11:50 AM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.
  • யார் காட்டின் ராஜா என்ற கேள்வி இந்த வீடியோவை பார்த்த பின் ஏற்படும்.
தம்பி... நீ ராஜாவா - அங்க ஓரமா போய் விளையாடு - சிங்கத்தை மிரட்டும் நீர்யானை title=

Hippo Lion Viral Video: சிங்கத்தை பெரும்பாலும் அனைவரும் 'காட்டின் ராஜா' என்று குறிப்பிடப்படுவார்கள். ஆனால் தென்னாப்பிரிக்காவின் எடுக்கப்பட்ட இந்த சமீபத்திய வைரல் வீடியோ அதை வேறுவிதமாக நிரூபிக்கிறது. ஒரு ஆக்ரோஷமான நீர்யானை, ஏரியில் இருந்து தண்ணீரைப் பருகிக்கொண்டிருந்த சிங்கத்தை பயமுறுத்தும் சிலிர்ப்பான காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

Latest Kruger என்ற வனவிலங்கு இன்ஸ்டாகிராமில் குறித்த கணக்கு மூலம் பகிரப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், ஏரியின் கரையில் சிங்கம் தண்ணீர் குடிப்பதைக் காணலாம். ஏரியின் மையத்தில் இருந்த ஒரு நீர்யானை கோபமடைந்து, சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. நீர்யானை திடீரென அதன் மீது பாய்ந்து தாக்குவது போல் பாவ்லா காட்ட சிங்கம் கலங்கியது. வீடியோவின் முடிவில் நீர்யானை சிங்கம் நோக்கி ஓடும்போது, அது பயந்து ஓடுவிடுவது வீடியோவில் தெரிகிறது. வைரலான இந்த வீடியோவின் கேப்ஷனில்,"நீர்யானை, தன் வீட்டில் தண்ணிக்குடிக்கும் சிங்கத்தின் மீது கோபம் கொள்கிறது".

மேலும் படிக்க | Viral Video: சீறிய பாம்பை புரட்டி எடுத்த பூனை! இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!

நீர்யானை சிங்கத்தை பயமுறுத்தும் இந்த வீடியோ, பதிவிட்டு சிறிது நேரத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த வீடியோவைப் பார்த்து உற்சாகமாகி வருகின்றனர். மேலும், நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். பயனர்களில் ஒருவர்,"யார் இந்த இடத்திற்கு சொந்தகாரன் என்பதை சிங்கத்திற்கு நினைவூட்ட நீர்யானை விரும்பியது" என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், "நீர்யானைதான் காட்டின் உண்மையான ராஜாவாக இருக்க வேண்டும். அதாவது, "ராஜா" அப்படி ஓடினால்..." மூன்றாவது பயனர்,"இப்போது காட்டின் ராஜா யார்" என்றும் கேட்டார்.

நீர்யானை அரை நீர்வாழ் பாலூட்டிகள் ஆகும். அவை பொதுவாக ஆறுகள் மற்றும் ஆழமற்ற ஏரிகளில் வாழ்கின்றன. நீர்யானை தன்னை முழுமையாக தண்ணீரில் மூழ்கடிக்க வேண்டும். எனவே அது போதுமான ஆழத்தில் இருக்க வேண்டும். நீர்யானைகள் நிலத்தில் உள்ளவை அல்ல, ஆனால் அவை தண்ணீரில் உள்ளன. அவர்களின் புல்வெளியில் அத்துமீறி நுழைபவர்கள் தாக்கப்படுவார்கள். சிங்கத்தை பயமுறுத்தும் நீர்யானையின் வைரல் வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு திருமணத்தில் கிடைத்த முத்த மழை: யாரு கொடுத்தா தெரியுமா? டிவிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News