பிளாஸ்டிக் பாட்டிலை தவறுதலாக விழுங்கி மலைப்பாம்பு, அந்த பாட்டிலை கக்கும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிளாஸ்டிக் மாசுபாடு இந்தியாவில் ஆபத்தான சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறி வருகிறது. நாடு ஆண்டுதோறும் 9.46 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் 40 சதவீதம் சேகரிக்கப்படாமல் உள்ளது என்று தன்னார்வ முன்முயற்சி அன்-பிளாஸ்டிக் கூட்டு ஆய்வு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடல் பகுதியில் முடிவடையும் பிளாஸ்டிக் கழிவுகளும் மிக அதிகம். சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியப் பெருங்கடலில் மட்டும் தொலைதூரத் தீவுகளில் 238 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
When it comes to #plastic there is nothing called as throwing away. See how single use plastic like bottles effecting the wildlife & other species. Video may disturb you. pic.twitter.com/swnxAjbyCx
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2020
பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிக விழிப்புணர்வு இருந்தாலும், இதுநாள் வரையிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. அதற்கு சான்றாய் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் வனவிலங்குகளின் அப்பட்டமான யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த வீடியோவில் ஒரு பாம்பு தவறுதலாக விழுங்கிய ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கக்க எறிய முயற்சிக்கும் வீடியோ இது. பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பார்வையாளர்கள் அடிக்கடி வரும் வனவிலங்கு வாழ்விடங்கள் குறித்து ஏராளமான நெட்டிசன்களின் மனசாட்சியை இந்த வீடியோ தாக்கியுள்ளது.
வீடியோவைப் பகிர்ந்த ஒரு உயர் வனப் பாதுகாவலர், பாம்பு ஒரு நாகமாக இருப்பதால், அதை உட்கொள்வதை தூக்கி எறிய முடியும், மற்ற உயிரினங்களால் முடியாது." அவை வலியால் இறந்துவிடுவார்கள்", என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.