Escaping Dog: முதலை வாய்க்கு போகாமல் தப்பிக்க முயலும் நாய்: வீடியோ வைரல்

Viral Animal Video: முதலை வாய்க்குள் சிக்காமல் சாதுரியமாக தப்பிக்க முயலும் நாய் வீடியோ வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2022, 08:16 PM IST
  • முதலையின் ஆக்ரோஷத்தை உணர்த்தும் வீடியோ
  • முதலையின் வாயில் சிக்காமல் எஸ்கேப் ஆகும் நாய்
  • மிருகங்களின் வேட்டை வாழ்க்கை
Escaping Dog: முதலை வாய்க்கு போகாமல் தப்பிக்க முயலும் நாய்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகத்தில் பல வித வீடியோக்கள் வைரலாகிறன. இவற்றில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன, அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சோகத்தையும் கொடுக்கின்றன.. 

சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரல் ஆகும் வீடியோக்கள் பரவசமாக மட்டுமல்லாமல், பாடம் கற்றுக் கொடுப்பவைகளாகவும் இருக்கின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகின்றன.

நாய் ஒன்று முதலையின் வாய்க்குள் சிக்காமல் இருக்க முயற்சிக்கும் சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது. 

மேலும் படிக்க | முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள்

வைரல் வீடியோவில், நாயை தப்பிக்க வைக்க முயற்சிப்பது யார் என்று தெரியவில்லை என்றாலும், முதலையின் தீவிரமான வேட்டை மனோபாவம் வெளிப்படுகிறது.

சில நொடிகள் மட்டுமே என்றாலும் நாயின் பரிதவிப்பும், உயிர் பிழைக்கும் முயற்சியும் துல்லியமாக தெரிகிறது.

வைரலாகும் வீடியோவை பார்த்தால் மயிர் கூச்செறிகிறது... இரைக்காக தவிக்கும் விலங்கும், இரையாகாமல் தப்பிக்க முயலும் விலங்கும் வீடியோவில் தெரிகின்றன. சில நொடிகள் மட்டுமே இருந்தாலும், உயிர் வாழ்வதற்கான அடிப்படையை சொல்லும் இந்த வீடியோ சிந்திக்க வைக்கிறது.

மேலும் படிக்க | சர்ப்ரைஸ் கொடுத்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்வூட்டிய திமிங்கல வீடியோ

அச்சமும், தாக்கும் வெறியும் இரு விலங்குகளின் உடல்மொழியிலும் துல்லியமாக வெளிப்படுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், அந்த நாய் தப்பிக்கும் முயற்சியில் மேட்டில் மேலே ஏற முயற்சிக்கிறது.

அந்த நாயை யாராவது மேலே இருந்து காப்பாற்றுவார்களா? இந்த கேள்வி வீடியோவை பார்க்கும் நமது மனதில் எழுகிறது. ஆனால், யாரும் காப்பாத்திடாதீங்க. எனக்கு பசிக்குது என்று ஆக்ரோஷமாக தாவி, இரையை பிடிக்க முயற்சிக்கும் முதலையின் முயற்சி தோற்றுப் போக வேண்டும் எனவே ஆசை ஏற்படுகிறது.

சில விநாடிகளே இருக்கும் இந்த வீடியோவில் நீர்நிலைக்குள் இருக்கும் முதலை, கரையை நோக்கி வந்து நாயை பிடிக்க முயல்கிறது. ஆனால், அது மேலே ஏறாமல், இருந்த இடத்தில் இருந்து சற்று வெளியே வந்து ஆக்ரோஷமாக வாயைத் திறந்து பாய முயற்சிக்கிறது.

மேலும் படிக்க | ஆமைகளுக்குள் நடந்த வித்தியாசமான போட்டி! வைரலாகும் வீடியோ! 

முதலையின் ஆக்ரோஷ தாக்குதலில் நாய் சிக்கியிருக்க வேண்டும். ஆனால், மேட்டுப்பகுதிக்கு நாய் நகர முயற்சிப்பதால், முதலையின் விருப்பம் நிறைவேறவில்லை. 

இறுதியில் முதலை வாய்க்கு நாய் போனதா இல்லை நாயின் அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக வைரலாகும் வீடியோக்கள் சில விநாடிகள் மட்டுமே இருப்பதும், அதில் பிரச்சனைகள் மட்டுமே காட்டப்படுவதும், கிளைமேக்ஸ் என்ன என்று தெரியாமல் போவதும் பார்ப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

விலங்குகளின் வீடியோக்கள் இவை. இவற்றை இங்கே பார்த்து மகிழவும்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் வித்தியாசமானவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். 

மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News