பெட் வெச்சிக்கலாமா? ஒரு முறை பார்த்தா மீண்டும் மீண்டும் பாப்பீங்க... கியூட் நாயின் வைரல் வீடியோ

Funny video: மிக சோர்வான மனநிலையில் இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு உற்சாகம் பிறந்துவிடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2023, 03:53 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள்.
பெட் வெச்சிக்கலாமா? ஒரு முறை பார்த்தா மீண்டும் மீண்டும் பாப்பீங்க... கியூட் நாயின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாய்கள் தங்கள் எஜமானர்களை ஆசையாக்யின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. நாய்கள் வளர்க்கப்படும் வீடுகளில் அவை வீட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மீதும், வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை காட்டுகின்றன.

நாய்கள் பல வழிகளில் தங்கள் எஜமானர் மீது அன்பை காட்டுகின்றன. நாய்கள் அவர்களை ஆசையுடன் கட்டித் தழுவி முத்தமிடும் பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. சமீபத்ய்திலும் ஒரு அழகான நாய்க்குட்டியின் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கிளிப்பை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், நாய் தன் எஜமானருக்கு அவருக்கு தெரியாமல் மறைமுகமாக முத்தமிடுவதுதான். இந்த வீடியோ மிக கியூட்டாக, மனதை கவரும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | இது என்ன மாயமா இல்லை மந்திரமா... மலை ஆட்டிடம் தோற்றுப் போன புவி ஈர்ப்பு விசை...! 

இந்த வீடியோ, "ஸ்னீக்கி கிஸ்ஸஸ்" என்ற பொருத்தமான தலைப்புடன் பகிரப்பட்டது. வீடியோவின் துவக்கத்தில் ஒரு சோஃபாவில் ஒரு நபர் அமர்ந்திருப்பதையும், அவர் பின்னால் அவரது செல்ல நாய் இருப்பதையும் காண முடிகின்றது. ஆனால், அதற்கு ரியாக்ட் செய்து அந்த நபர் நாயை பார்க்கும்போது, தனக்கும் அந்த முத்தத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நாய் வேறு எங்கோ பார்க்கின்றது. இதே போல வீடியோ முழுவதும் நடப்பது மிக வேடிக்கையாக இருக்கின்றது. 

மிக கியூட்டாக ஒரு நாய் தன் நண்பருக்கு கொடுக்கும் கிஸ்ஸின் வீடியோவை இங்கே காணலாம்: 

மிக சோர்வான மனநிலையில் இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு உற்சாகம் பிறந்துவிடும். நாயின் கிஸ் கொடுக்கும் விதமும் அதன் பின் அது காட்டும் ரியாக்ஷனும் அத்தனை கியூட்டாக உள்ளது. 

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகம், விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: பதறவைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News