வீடியோ: மதுபோதையில் இரண்டு போலீசாரை சரமாரியாக தாக்கிய நபர்

கர்நாடக மாநிலத்தில் இரண்டு போலீசாரை மதுபோதையில் சரமாரியாக தாக்கிய நபர்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 10, 2018, 06:19 PM IST
வீடியோ: மதுபோதையில் இரண்டு போலீசாரை சரமாரியாக தாக்கிய நபர்
Pic Courtesy : ANI

எந்த இடத்திலும் காவல் துறையினரை பார்த்தால் சாதாரண மனிதர்க்கு மனதில் சிறிது பயம் ஏற்படுவது என்பது உண்மை. ஆனால் கீழே உள்ள காணோளியை பார்த்தால், போலீசாரை கண்டால் மனிதர்க்கு பயம் அறவே இல்லை என்பது போல தான் உள்ளது. 

இச்சம்பவம், கர்நாடக மாநில தேவங்கிரி மாவட்டத்தில் ஒரு மனிதன் இரண்டு போக்குவரத்து காவலாளர்களை தாக்கினார். ANI செய்தி நிறுவனத்தின் வீடியோ படி, போக்குவரத்து காவலாளர்களை தாக்கிய நபர் ஒரு கடையிலிருந்து ஏதோ ஒன்றை வாங்கிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர், போக்குவரத்து போலீசாரின் தலையில் கடையில் இருந்த ஒரு பொருளை எடுத்து தாக்கி உள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. ஆனாலும் அந்த நபர் தாக்குதலை நிறுத்தாமல், உடனடியாக மற்றொரு போக்குவரத்து போலீசாரை தாக்கினார். இதனால் அந்த பகுதியில் கூட்டம் சேர்ந்தது.

தற்போது அந்த நபர் கைது செய்து, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

இதுக்குறித்து போலீசார் தரப்பில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மது போதையில் இருந்தார். இதனால் வேண்டுமென்றே போக்குவரத்து காவலர்களை தாக்கினார். ஒரு காவலரை உயிர்சேதம் ஏற்ப்படும் அளவுக்கு தாக்கி உள்ளார். அதே நேரத்தில், மற்ற ஒரு காவலரை சரமாரியாக தாக்கி உள்ளார் என தெரிவித்தனர்.