'உசுரு முக்கியம்டா பரமா' வண்டி ஓட்டி யானையை அலற விட்ட பெண்: வைரல் வீடியோ

யானை ஒன்றை உசுரு முக்கியம் டா என்கிற அளவுக்கு யோசிக்க வைத்த பெண் ஒருவரின் அசாத்தியமான டிரைவிங் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2023, 10:17 PM IST
  • ஸ்கூட்டியில் வந்த பெண்
  • பயந்து போனை யானை
  • வனப்பகுதிக்குள் ஓட்டம்
'உசுரு முக்கியம்டா பரமா' வண்டி ஓட்டி யானையை அலற விட்ட பெண்: வைரல் வீடியோ title=

வன விலங்குகளைப் பார்த்தால் மக்கள் தான் பயப்படுவார்கள். அவற்றிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கையாக யோசித்து செயல்படுவார்கள். குறிப்பாக சாலையில் செல்லும்போது குறுக்கே ஏதாவது ஒரு விலங்கு வந்துவிட்டால் சாலையில் செல்பவர்கள் தான் வாகனத்தை நிறுத்துவிட்டு ஓடுவார்கள். புலி, சிங்கம், யானை அல்லது கரடி என எதுவாக இருந்தாலும் எதிரில் நின்றுவிட்டால் சாலையில் செல்பவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். ஆனால், இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவில் அதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது ஒரு சம்பவம். சாலையின் குறுக்கே வந்த ஒரு யானை, தப்பித்தால் போதும்டா சாமி என்றளவுக்கு பயந்து ஓடுகிறது. 

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

அந்தளவுக்கு யானைக்கே அலறலை ஏற்படுத்திய பெண்ணின் வீடியோவை தான் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஜெட் வேகத்தில்  இருச்சக்கர வாகனத்தில் செல்லும் பெண், யானை சாலையின் குறுக்கே வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. யானையும் யார் வந்தாலும் நம்மை பார்த்தால் நின்று தான் வருவார்கள் என்ற தொணியில் சாலையின் குறுக்கே வந்துவிட்டது. ஆனால், யானை திடீரென சாலையின் குறுக்கே வந்துவிட்டதால் வண்டியை அப்பெண்ணால் துளியும் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. 

அதிர்ச்சி கலந்த பயத்துடன், யானை மீது விடப்போகிறேமே என பதட்டத்தில் வண்டியை இயக்க, குறுக்கே வந்த யானையோ அட சாமி நம்ம உசுரு இன்னைக்கு போய்டும் போல இருக்கே... எப்படியாவது தப்பிச்சுறுடா பரமா என நொடிப் பொழுதில் மைண்ட் வாய்ஸில் சிந்தித்து தப்பித்துக் கொள்கிறது. அந்த பெண்ணும் யானை மீது மோதாமல் தப்பித்தோமடா என ஒரு நொடி பெருமுச்சே விட்டார். இந்த வீடியோ மட்டும் பேஸ்புக்கில்  ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. பார்த்த அனைவருமே வயிறு வலிக்க சிரிப்பை அடிக்க முடியவில்லை என கமெண்ட் அடித்துள்ளனர். 

மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News