Video: விராட் கோலி, ரோகித்தை மிஞ்சிய சிறுவனின் பேட்டிங் திறமை!

கிரிக்கெட் விளையாட்டு என்றால் பெரும் பொருட் செலவில் மைதானத்தில் நடத்தப்படுவது மட்டும் அல்ல, பல லட்சம் வீதிகளில் சிறுவர்களால் விளையாடப்படும் போட்டிகளும் தான்...

Last Updated : Jan 14, 2020, 04:52 PM IST
Video: விராட் கோலி, ரோகித்தை மிஞ்சிய சிறுவனின் பேட்டிங் திறமை! title=

கிரிக்கெட் விளையாட்டு என்றால் பெரும் பொருட் செலவில் மைதானத்தில் நடத்தப்படுவது மட்டும் அல்ல, பல லட்சம் வீதிகளில் சிறுவர்களால் விளையாடப்படும் போட்டிகளும் தான்...

அவ்வாறான வீதி கிரிக்கெட் போட்டி ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வியப்பு என்ன வென்றால் பேட்டிங் செய்வது ஒரு சிறுவன், அவருக்கு பந்து வீசுவது அவரது தாயார். மேலும் இந்த வீடியோவில் பேட்டிங் செய்யும் சிறுவன் பிரபல மட்டையாளர்களான விராட் கோலி, ரோகித் சர்மா அல்லது வேறு எந்த பிரபல கிரிக்கெட் வீரரும் அடிக்காத ஷாட்களை அடிக்கின்றான். 

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் உட்பட பலர் இந்த கிளிப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கைஃப் தனது வீடியோவிற்கு தலைப்பிடுகையில்., ‘அம்மா பந்துவீச, குழந்தை பேட்டிங் செய்கிறான். ஒரு சொல்லில் கூற வேண்டும் என்றால் அழகு’ என குறிப்பிட்டுள்ளார். குறுகிய கிளிப், வெறும் 27-வினாடி நீளமுள்ள ஒரு வீடியோ ஆகும். எனினும் இந்த வீடியோவில் காண்பிக்கப்டும் காட்சிகள், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது எனலாம்...

கைஃப் இந்த வீடியோவினை ஜனவரி 13 அன்று பகிர்ந்துள்ளார், அதன் பின்னர் இது 13,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 1,400-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் சேகரித்துள்ளது. இதனிடையே இந்த வீடியோ குறித்து பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன என்பதை வீடியோவை பார்த்திவிட்டு பகிருங்கள்....

Trending News