இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
அந்த வகையில் இன்று நாம் 3 சிறுத்தைகள் மற்றும் தேன் வளைக்கரடி பற்றிய வீடியோவை காண உள்ளோம். இதில் மூன்று சிறுத்தைகளை தேன் வளைக்கரடி ஒற்றை எதிர்கொள்வதை வைரல் வீடியோவில் காணலாம். அந்த தேன் வளைக்கரடியை சிறுத்தைகள் மாறி மாறி தாக்குகிறது. ஆனால் இறுதி வரை வீடியோவை கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள்.
மேலும் படிக்க | என்ன அழகு எத்தனை அழகு..தொகை விரித்து நடனமாடும் வெள்ளை மயில்: வீடியோ
கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த தேன் வளைக்கரடி
தேன் வளைக்கரடி என்பது கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இதை ஆங்கிலத்தில் ஹனி பேட்ஜர் என்பார்கள். தேன் வளைக்கரடியானது ஏனைய வளைக்கரடி இனங்கள் போன்ற தோற்றத்தில் இருக்காது; மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. இந்திய துணைகண்டத்தில் இவ்விலங்கு மிகவும் அரிதாக காணப்படுகிறது. மேலும் இது மிகவும் அச்சமில்லாத விலங்கு. அதன் உடலுக்கு பாம்பு விஷம் மற்றும் தேள் கடி விஷத்தையே எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
காட்டில் ரவுண்டு கட்டிய மூன்று சிறுத்தைகள்
இந்த நிலையில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், மூன்று சிறுத்தைகள் ஒரு தேன் வளைக்கரடியை ரவுண்டு கட்டி சிதறவிட்டிருக்கிறது. அதற்கு பின், அந்த தேன் வளைக்கரடியை இந்த மூன்று சிறுத்தைகள் கொடூரமாக தாக்குகிறது. இறுதியில் கடுப்பான அந்த தேன் வளைக்கரடி, 3 சிறுத்தைகளையும் ரவுண்டு கட்டி தாக்குகிறது. இதன் தாக்குதலை கண்டு அச்சயமைந்த சிறுத்தைகளை அங்கிருந்து ஓடிவிடுகிறது. சிறுத்தைகளை சிதறவிட்டு வெற்றியுடன் வெளியே வருவதைப் பார்க்கும்போது, தேன் வளைக்கரடியின் தைரியத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோவை நீங்களும் கண்டால் கட்டாயம் வியந்து போவீர்கள்.
சிறுத்தைகளை சிதறவிட்ட தேன் வளைக்கரடியின் வைரல் வீடியோ:
The Field Marshal takes on three big cats & comes out victorious
Honey Badger is the most fearless animal. Their skin is thick & remarkably loose, allowing them to turn and twist freely letting them attack even when held by the neck. Immune to snake venoms & Scorpions bites. pic.twitter.com/CHTN5xfwxK— Susanta Nanda (@susantananda3) May 4, 2023
இந்த வைரலான வீடியோ @TheFigen_ என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. சுமார் 10 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | புழுதி பறக்க வெறித்தனமாக மோதிக்கொண்ட இரண்டு யானைகள்..வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ