சாகச பயணம் மேற்கொள்ளும் ஆசையில் அமெரிக்கா சென்ற இளம் தம்பதியர் சுமார் 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர்!
இந்தியாவை சேர்ந்த இளம் தம்பதியர் விஷ்ணு விஸ்வநாத் (29), மீனாட்சி மூர்த்தி (30). சாகச பயணங்களை விரும்பி மேற்கொண்டு வந்த இந்த தம்பதியார் கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் கலிஃபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்காவிற்கு உட்பட்ட பகுதியில் எதிர்பாரா விதமாக விழுந்து உயிர் இழந்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத், தனது மனைவி மீனாக்ஷியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சமீபத்தில் குடிபெயர்ந்துள்ளார். சான் ஜோஸ் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் சிஸ்கோ நிறுவனத்தில் சிஸ்டன் இன்சினியராக பணி கிடைந்து அமெரிக்க சென்ற விஷ்ணு சாகச பயணங்களில் ஆர்வம் கொண்டவர்., இதன் காரணமாக அடிக்கடி சுற்றுலா சென்று, அங்குள்ள மலைகளின் உச்சியில் நின்று பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை தொடர்ந்து தங்களது பேஸ்புக் பக்கங்களிலும், ப்ளாகிலும் பதிவு செய்து வந்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில், பிரபல யோசிமிட்டி தேசிய பூங்காவிற்கு இருவரும் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்குள்ள 800 அடி பள்ளத்தாக்கில் இருவர்ம எதிர்பாரா விதமாக விழுந்து பலியானதாக தெரிகிறது. இவர்களது உடல்களை கடந்த வியாழனன்று பூங்கா அதிகாரிகள் டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு கீழே கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களின் மறைவு செய்தியை அறிந்த செங்கனூர் பொறியியல் கல்லூரி நிர்வாகம், இருவரும் தங்கள் கல்லூரி மாணவர்கள் எனவும், இவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது!