காலா! முதல் நாளின் முதல் ஷோ தமிழ்ராக்கர்ஸில்?

மிகுந்த எதிர்பார்ப்பின் இடையே காலா படம், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது

Last Updated : Jun 7, 2018, 10:21 AM IST
காலா! முதல் நாளின் முதல் ஷோ தமிழ்ராக்கர்ஸில்?

மிகுந்த எதிர்பார்ப்பின் இடையே காலா படம், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை  வெளியானது. உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகம்,  மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெளியானது. 

இந்த நிலையில், காலா படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் முதல் நாளின் முதல் ஷோ முடிவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதனால் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியடைந்தனர். 

 

 

More Stories

Trending News