காதலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பலவிதமானவை. நாம் சினிமாக்களில் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பலவற்றை பார்த்திருப்போம். பொதுவாக எல்லா சினிமாக்களிலுமே, பெற்றோர்கள் காதலை எதிர்ப்பவர்கள் ஆகவே இருப்பார்கள். சிலர் எதிர்ப்பதோடு நிற்காமல் கவுரவ கொலை வரை கூட செல்லும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை நாம் தினமும் கேள்விப்படுகிறோம்.
காதலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லில் அடங்காதவை. காதலிப்பது பாவமோ என எண்ண வைக்கும் அளவிற்கு பல சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு நேர்ந்த நிலை, காதலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் உண்மை தான் என்பதை நிரூபிக்கிறது. கர்நாடகாவில், தனது காதலியை ரகசியமாக சந்திக்க போய், அவளின் தந்தை நடத்திய தாக்குதலால் நிலைகுலைந்து போய் உள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த சுஹைல் என்ற நபர், தனது காதலி வீட்டிற்கு நடு இரவில் சென்று, அவளை அழைத்துக்கொண்டு, ஓடிச் செல்ல திட்டமிட்டுள்ளார். காதலுக்கு பெரும் எதிரியாக இருந்த அவளது தந்தை, தனது மகளை, பல சமயங்களில் அடித்து துன்புறுத்தி, தனது எதிர்ப்பை காட்டி உள்ளார்.
இந்நிலையில், தந்தையின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, தப்பியோட இருவரும் திட்டமிட்டு இருந்தனர். எங்கேயாவது தொலைதூரப் பகுதிக்கு சென்று மகிழ்ச்சியாக வாழ திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் திட்டம் தவிடு பொடியானது. அவளது தந்தை செய்த செயல் அவர்களது திட்டத்தை பாழ்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவள் காதலனை நிலைகுலையச் செய்துள்ளது.
வேறு இடத்திற்கு சென்று மகிழ்ச்சியாக வாழ இவர்கள் போட்ட திட்டத்தை முன்னமே அறிந்திருந்த, அவளது தந்தை, தனது மகளின் காதலன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றி தாக்கியுள்ளார். இதனால், உடல் வெந்து போய் தவித்து போன காதலன் அலறியது காதலியை உறைய வைத்தது. .
கடுமையான தீக்காயம் காரணமாக, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 20 வயதுகளில் இருக்கும் சுஹேல், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். கர்நாடகாவில் நடந்துள்ள இந்த சம்பவம், பெரிதும் வைரலாகி உள்ளது.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ