கொரோனாவை தவிர்க்க விஷ பாம்பை சாப்பிட்ட நபருக்கு என்ன ஆச்சு?

தமிழத்தின் மதுரை மாவட்டத்தில் ஒருபவர் தன்னை கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பை சாப்பிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 29, 2021, 11:04 PM IST
  • கொரோனா தொற்றின் பீதி உச்சத்தில் உள்ளது.
  • கொரோனாவை தவிர்க்க பாம்பை சாப்பிட்டார் ஒருவர்.
  • வனத்துறையினர் அவரை கைது செய்தனர்.
கொரோனாவை தவிர்க்க விஷ பாம்பை சாப்பிட்ட நபருக்கு என்ன ஆச்சு?  title=

மதுரை: பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்பு மனிதனைக் கடித்தால், அடுத்த நிமிடம் மரணம் என்ற நிலை மாறி, உயிரை காத்துக்கொள்ள, மனிதன் பாம்பை கடிக்கும் நிலை வந்து விட்டது. காலம் அனைத்தையும் மாற்றி விடுகிறது. அனைத்தையும் புரட்டிப்போட்டு விடுகிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். 

கொரோனா தொற்றின் (Coronavirus) பீதி உலக மக்களை பதட்டத்தில் வைத்துள்ளது. கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள், தங்களுக்கு தோன்றியதையெல்லாம் செய்து வருகிறார்கள். இவற்றில் பல முயற்சிகள் ஆபத்தாய் மாறி விடுகின்றன என்பது பரிதாபமான உண்மையாகும்.

தமிழத்தின் மதுரை மாவட்டத்தில் ஒருபவர் தன்னை கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பை சாப்பிட்டுள்ளார். 

வடிவேலு என்ற அந்த 50 வயது நபர் பெருமாள்பட்டியில் விவசாய தினக்கூலியாக வேலை செய்பவர். பாம்புகள் COVID-19 க்கு நல்ல மாற்று மருந்துகள் என்றும் அதனால்தான் தான் ஒரு பாம்பை சாப்பிடுவதாகவும் அவர் கூறினார். 

ALSO READ: Watch: Live Show-வில் ஊழியரைத் தாக்கிய பாம்பு, வீடியோ வைரல், அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

அதிர்ஷ்டவசமாக கொடிய விஷம் கொண்ட பாம்பை சாப்பிட்ட போதும், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. பாம்பின் விஷ சுரப்பிகளை அவர் கடிக்காததால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறப்படுகின்றது. அந்த பாம்பு (Snake) ஒரு கட்டுவிரியன் என்று கூறப்படுகின்றது. 

ALSO READ: WATCH: சிவப்பு ரோஜா மேல் சுருண்டுள்ள நீல நிற பாம்பின் வீடியோ வைரல்!!

அந்த நபர் பாம்பை சாப்பிட்டபோது அவர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கால்வாயில் கண்டறியப்பட்ட பாம்பை சாப்பிட பலர் அந்த நபரை தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. கோவிட்டை தவிர்க்க பாம்பை சாப்பிடுவது நல்லது என அனைவருக்கும் அறிவிக்குமாறும் சுற்றியிருந்தவர்கள் அந்த நபரை தூண்டியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகியதும், இதை கவனித்த வனத்துறை அந்த நபரை கைது செய்தது. அவருக்கு வனத்துறையினரால் ரூ .7,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ALSO READ: பாம்பைப் பிடித்து லுங்கிக்குள் போட்ட நபர்; வீடியோவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News