இளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் 'Maari’s Aanandhi'!

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படத்தின் 'Maari’s Aanandhi' பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Dec 10, 2018, 06:21 PM IST
இளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் 'Maari’s Aanandhi'!

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படத்தின் 'Maari’s Aanandhi' பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன்-26 ஆம் தேதி படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாக அறிவித்த படக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள Maari’s Aanandhi பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இப்பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்க, இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் 21-ஆம் நாள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News