பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி: பாம்பை கொன்று மாஸ் காட்டும் பூனை

Funny Animal Video: பூனை அசால்டாக பாம்பை வேட்டையாடும் இந்த பாணி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2022, 02:48 PM IST
  • பாம்புக்கு கீரிப்பிள்ளை மிகப்பெரிய எதிரி.
  • பாம்புகள் பூனைகளையும் அவ்வளவாக விரும்புவதில்லை.
  • பாம்பை கொன்ற பூனையின் வீடியோ வைரல் ஆனது.
பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி: பாம்பை கொன்று மாஸ் காட்டும் பூனை title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்புக்கு கீரிப்பிள்ளை மிகப்பெரிய எதிரி என்றாலும், பாம்புகள் பூனைகளையும் அவ்வளவாக விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? வழுக்கும் மற்றும் சுழலும் உயிரினங்களை இயற்கையாகவே வேட்டையாடும் பூனைகளைக் கண்டால் பாம்புகள் பயப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. 

மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ 

பாம்புகள் பூனைகளையும் கொல்வதுண்டு. எனினும், பொதுவாக, அவை சிறிய விஷமற்ற பாம்புகளாக இருந்தால், பூனைகளுக்கு முன்னால் அவற்றால் தாக்குப்பிடிக்க முடியாது. பூனைகள் மிகவும் வேகமாக இருப்பதால், பொதுவாக பாம்புகளால் அவற்றிடமிருந்து தப்பிக்க முடிவதில்லை. 

பூனைகளின் உள்ளுணர்வு பெரும்பாலும் பாம்புகளைத் தவிர்ப்பதை நோக்கியே இருக்கும் என்றாலும், அவை பாம்புகளை வேடிக்கையான பொம்மைகளாகவே பார்க்கின்றன. பூனைகள் அப்போதுதான் சாப்பிட்டிருந்தாலும், பாம்புகளைக் கண்டுவிட்டால், அவற்றை வேட்டையாடி சாப்பிடும். பூனை ஒன்று சிறிய பாம்பை எளிதாக வேட்டையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'meowcat_happypet' என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இது இதுவரை 32,000 வியூஸ்களைப் பெற்றுள்ளது. சாலையைக் கடக்கும் சிறிய பாம்பை கருப்புப் பூனை ஒன்று சிரமமின்றிப் பிடிப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. பாம்பு தப்பிக்க முயல்கிறது, ஆனால் பூனை அதன் பற்களால் அதை நன்றாக பற்றிக்கொள்வதால், அதனால் தப்பிக்க முடியவில்லை. 

பூனையின் இந்த முகம் பெரும்பாலும் பலருக்கு தெரிந்திருக்காது. பூனை அசால்டாக பாம்பை வேட்டையாடும் இந்த பாணி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும். ஆனால், சாலையில் போகும் பாம்பை பார்த்து ஓரமாக நகர்ந்து போகாமல், அதை தன் வாயால் கவ்வி, பல்லால் கடித்து வேட்டையாடிய பூனையை இணையம் ஒரு ஹீரோவாக பார்த்து வருகிறது. 

மேலும் படிக்க | ஊஞ்சலாடப் போய் மல்லாக்கா விழுந்த பெண்கள்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News