ராகுலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கோரிக்கை!!

தனது சகோதரர் ராகுல் காந்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி, வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்!!

Updated: Apr 5, 2019, 11:23 AM IST
ராகுலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கோரிக்கை!!

தனது சகோதரர் ராகுல் காந்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி, வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்!!

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அரசியல் கச்சுகள் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகின்றனர். 

இதையடுத்து, மக்களவை தேர்தலில் வையநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து நேற்று மனு தாக்கல் செய்வதையொட்டி ஹெலிகாப்டர் மூலமாக ராகுல் காந்தி வயநாடு வந்தார். தென்னிந்தியர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் வேட்டி - சட்டை அணிந்திருந்தார். ராகுல் காந்தியுடன், அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வத்ரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். 

இந்நிலையில், ராகுலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி ட்விட்டரில் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் உருக்கமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எனது சகோதரர், எனது உண்மையான நண்பன் மற்றும் எனக்கு தெரிந்தவரையில் மிகவும் தைரியமான மனிதர், அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என வயநாடு மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில், தான் தொடர்ந்து எம்.பி.யாக பதவி வகித்து வரும் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.