நாய் பண்ண வேலைய பாருங்க.. நமக்கெல்லாம் ஒரு பாடம்: சல்யூட் அடிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Dog Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு உடனே உத்வேகம் பிறக்கும். அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2023, 02:41 PM IST
  • சமூக ஊடகங்களில் இந்த வீடியோ 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
நாய் பண்ண வேலைய பாருங்க.. நமக்கெல்லாம் ஒரு பாடம்: சல்யூட் அடிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பல விதமான வித்தியாசமான வீடியோக்களை நாம் தினமும் பார்க்கிறோம். இவை  பயனர்களை மகிழ்விப்பதோடு அவர்களை உற்சாகப்படுத்துகின்றன. இந்த வீடியோக்கள் நம் மனநிலையில் புத்துணர்ச்சியை புகுத்தவும் உதவுகின்றன. நாம் சில சமயம் மிகவும் சோர்ந்த அல்லது சோகமான மனநிலையில் இருக்கும்போது, இந்த வீடியோக்கள் நமக்கு தேவையான உத்வேகத்தை அளிக்கின்றன.

அப்படி ஒரு வீடியோ தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை நாட்டின் பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்தால் கண்டிப்பாக அனைவருக்கும் ஒர் வேகம் பிறக்கும், முகத்தில் ஒரு புன்னகை பூக்கும்.

ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒரு அழகான நாய்க்குட்டியை காண முடிகின்றது. வாழ்க்கையில் வெற்றி அடைய சிறிய, பெரிய தடைகள் அனைத்தையும் நாம் தகர்த்து போராட வேண்டும் என்பதை இந்த நாய் நமக்கு சொல்லிக்கொடுக்கின்றது. போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை இது தனது செயலின் மூலம் எடுத்துக்காட்டுகின்றது. பெரும்பாலான பயனர்கள் இந்த வீடியோவை விரும்பிப் பார்ப்பதற்கு இதுவே காரணம். இதனுடன், பல பயனர்கள் இந்த வீடியோவை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைத்து பயனர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானை: வைரல் வீடியோ

நாய்க்குட்டி ஒரு ஓடையை கடக்கிறது

இந்த வைரலான வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ஒரு சிறிய நாய்க்குட்டி ஒரு வாய்க்கால் அருகே இருப்பதை காண முடிகின்றது. வாய்க்கலின் மறுபுறம் செல்ல அது முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கம் குதித்து வாய்க்காலை கடக்க அது முயற்சிக்கிறது. ஆனால், அதில் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்த கரையை சேரும் முன்னரே அது வாய்க்காலில் விழுந்து விடுகிறது.

இணையவாசிகளை கவர்ந்த வீடியோவை இங்கே காணலாம்:

வெளியானவுடன் வைரல் ஆன வீடியோ

கீழே விழுந்த பின்னரும் அந்த நாய் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மேலே வர அது தொடர்ந்து முயற்சி செய்கிறது. இறுதியில் நாய்க்கு வெற்றியும் கிடைக்கிறது. வீடியோவைப் பகிர்ந்துள்ள ஹர்ஷ் கோயங்கா, 'தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள் .. முயற்சி செய்யாமல் இருப்பதற்கு பயப்படுங்கள்' என்று தலைப்பில் எழுதியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. செய்தி எழுதும் நேரம் வரை சமூக ஊடகங்களில் இந்த வீடியோ 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’பாம்புகளின் ரொமான்ஸ்’ புழுதிக்காட்டில் கேமராவில் சிக்கிய காதல் விளையாட்டு: வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News