அவசர பட்டுட்டியே பங்கு...நபரை கடிக்க முயற்சித்த மலைப்பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

Python Viral Video: 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எதிர்முனையில் இருக்கும் நபரை பதம் பார்க்க பிளான் செய்கிறது, அதன்பின் நடந்ததை கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2023, 10:16 AM IST
  • பெண்ணை பதம் பார்க்க பிளான் செய்த மலைப்பாம்பு.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • மலைப்பாம்பின் வைரல் வீடியோ.
அவசர பட்டுட்டியே பங்கு...நபரை கடிக்க முயற்சித்த மலைப்பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல் title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது.

மேலும் படிக்க | ‘ஓவரா பண்ணாத...’ நாகப்பாம்பின் வாலை இழுத்து நக்கல் செய்த குரங்கு, வேற வெலவ் வைரல் வீடியோ

தற்போது வெளியாகி வரும் வீடியோவில் ஒரு மலைப்பாம்பை கண்ணாடி டப்பாக்குள் அடைத்து வைத்திருப்பதை நாம் காணலாம். கண்ணாடியின் வெளி புறத்தில் நபர் இருப்பதையும் நாம் காண முடிகிறது. அப்போது அந்த மலைப்பாம்பு தான் கண்ணாடி பாக்ஸில் இருப்பதை மறந்து போய் ஒரு வினாடியில் எதிர்முனையில் இருந்த நபரை பதம் பார்க்க முயற்சிக்கிறது, பிறகு தான் அந்த மலைப்பாமப்புக்கு புரிகிறது அது கண்ணாடி டப்பாக்குள் இருக்கிறது என்று. வெளியான இந்த வீடியோ நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

வீடியோ இங்கே காண்க:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | முதலையிடம் வசமாய் மாட்டிக்கொண்ட நாய்..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News