ரஜினியின் 2.0 படத்தின் சென்சார் ரிசல்ட் இதோ!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.

Updated: Nov 14, 2018, 09:38 AM IST
ரஜினியின் 2.0 படத்தின் சென்சார் ரிசல்ட் இதோ!!
Courtesy: Twitter

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படம் வரும் நவம்பவர் 29-ம் நாள் வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

 

 

மேலும் விலங்குகள் நல ஆணையத்திடம் இருந்து இப்படத்திற்குத் தடையில்லா சான்றிதழும் கிடைத்துள்ளதால், படம் வெளியாவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என நம்பப்படுகிறது.