Viral News: நடுரோட்டில் இப்படியா... காதலர்களின் வீடியோ வைரல்

Viral News: சமூக வலைதளங்களில் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவற்றைப் பார்த்து நெட்டிசன்கள் மன அழுத்தத்தை மறந்து சிரித்து வருகின்றனர். தற்போது திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 12, 2023, 10:46 AM IST
  • காதல் ஜோடிகள் சாலையோரம் நிற்கிறார்கள்.
  • நடுரோட்டில் காதலரின் விறுவிறுப்பான வீடியோ.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Viral News: நடுரோட்டில் இப்படியா... காதலர்களின் வீடியோ வைரல் title=

வைரல் செய்திகள்: சமூக வலைதளங்களில் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவற்றைப் பார்த்து நெட்டிசன்கள் மன அழுத்தத்தை மறந்து சிரித்து வருகின்றனர். அதிலும் தற்போதைய காலக்கட்டத்தில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

இதற்கிடையில், காதல் ஜோடிகள் சாலையோரம் நின்றுக் கொண்டு இருப்பதை நாம் இந்த வைரலான வீடியோவில் காணலாம். கொளுத்தும் வெயிலில் அவருடைய ஸ்கூட்டர் மரத்தடியில் நிற்பதைக் காணலாம். அப்போது காதலி தன் காதலனின் நெற்றியில் படர்ந்த வியர்வையைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்படுகிறாள். அந்த பெண் உடனடியாக ஒரு கர்சீஃப் அல்லது கைக்குட்டையை கையில் எடுத்து, தன் காதலியின் நெற்றியில் இருந்து வியர்வையை கவனமாக துடைக்க ஆரம்பிக்கிறாள்.

மேலும் படிக்க | ரோபோவை விட வேகமாக மனப்பாடம் செய்யும் பலே சிறுவன்..! வைரல் வீடியோ

காதலியின் இந்த செயலால் வெட்கமடைந்த காதலன், இதை செய்யாதே என்று கூறுகிறார். ஆனால், அவனது வார்த்தைகளை கவனிக்காமல், காதலனின் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே இருக்கிறாள். வீடியோ பிரேமில் இந்த காட்சி மிகவும் அழகாக உள்ளது. இந்த காட்சியை வழிப்போக்கர் ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த வீடியோ psycho_bihar என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | காட்டாற்று வெள்ளத்தில் மீன்களை இரையாக்கும் கரடிகள்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News