#Maari2 : 'அராத்து ஆனந்தி'-யாக களமிறங்கும் சாய் பல்லவி!

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாரி 2 படத்தின் முதல் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2018, 06:19 PM IST
#Maari2 : 'அராத்து ஆனந்தி'-யாக களமிறங்கும் சாய் பல்லவி! title=

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாரி 2 படத்தின் முதல் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது!

மாரி 2 திரைப்படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை இன்று துவங்கி படக்குழுவினர் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் கதாப்பாத்திரம் குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் படி, சாய்பல்லவி 'அராத்து ஆனந்தி' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி' . இப்படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 படம் தற்போது உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன்-26 ஆம் தேதி படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாக அறிவித்த படக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து படத்தின் போஸ்ட புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வந்தது. விரைவில் இப்படம் வெளியீட்டுக்கு தயாராகிவிடும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

Trending News