SHOCKING: மாணவியின் ஆடையை விமர்சித்த ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு

தனது ஆடை குறித்த ஆசிரியையின் விமர்சனத்தை 14 வயது மாணவி சாடியுள்ளார். வெண்ணிற டீ-ஷர்ட், நீண்ட கைகள் கொண்ட சாம்பல் நிற கார்டிகன் (மேல் அங்கி) மற்றும் முழங்கால் நீள பாவாடை அணிந்திருந்தேன். இந்த ஆடையை எப்படி தரக்குறைவானது என்று சொல்ல முடியும் என்று கோபத்தில் சீறுகிறார் 14 வயது மாணவி வாக்னர் (Wagner).

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2021, 02:20 PM IST
  • மாணவியின் ஆடையை விமர்சித்த ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு
  • 8ஆம் வகுப்பு மாணவியின் சீற்றம்
  • பள்ளியில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம்
SHOCKING: மாணவியின் ஆடையை விமர்சித்த ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு title=

தனது ஆடை குறித்த ஆசிரியையின் விமர்சனத்தை 14 வயது மாணவி சாடியுள்ளார். வெண்ணிற டீ-ஷர்ட், நீண்ட கைகள் கொண்ட சாம்பல் நிற கார்டிகன் (மேல் அங்கி) மற்றும் முழங்கால் நீள பாவாடை அணிந்திருந்தேன். இந்த ஆடையை எப்படி தரக்குறைவானது என்று சொல்ல முடியும் என்று கோபத்தில் சீறுகிறார் 14 வயது மாணவி வாக்னர் (Wagner).

8ஆம் வகுப்பில் படிக்கும் மாணவியின் மார்பகங்களைப் பற்றி பொருத்தமற்ற கருத்தைத் தெரிவித்த ஆசிரியை, "உலகம் முழுவதும் மார்பங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஆடை அணிந்திருக்கிறாயா" என்று கேட்டார்.

வகுப்பறையிலிருந்து வெளியேறும் போது ஆசிரியை இவ்வாறு தெரிவித்தார் என்று கூறும் மாணவி, "நீங்கள் 14 வயது சிறுமிகளை பாலியல் ரீதியாக நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்று கூறினார். பின்னர் தனது பெற்றோரிடம் விஷயத்தை சொல்வதற்காக பள்ளி நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார், ஆனால் அங்கிருந்து பெற்றோரை அழைக்க மாணவிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துடன் பேசியபோது, 10 நாட்களுக்கு பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தனது மகளின் கோபம் எல்லை கடந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்ட மாணவியின் தாய், தனது மகளின் கோபத்திற்கான காரணத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"எனது மகள் ஆசிரியையிடம் அப்படி பேசியிருக்கக்கூடாது என்று நான் நினைக்கவில்லை," என்று மாணவியின் தாய் சாரா கூறினார்.

ஆனால், எனது மகள் அவர் அடிப்படையில் தனது ஆசிரியையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்," என்று அவர் மேலும் கூறினார்.

பின்னர் பேஸ்புக்கில் இந்த விவகாரம் குறித்த செய்தியை வெளியிட்ட வாக்னர், "பள்ளி அமைப்பு ஏமாற்றத்தைத் தருவதாகவும், அதிகாரம், உரிமை எதுவும் இல்லை என்று புரிவதாக" தெரிவித்துள்ளார்.

Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News