Shocking: உலகின் முதல் AIDS நோயாளி யார் தெரியுமா? வியக்க வைக்கும் விவரங்கள்!!

AIDS பற்றி அறியப்பட்ட பிறகு, எட்டு வருடங்களுக்கு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் ஆண்களாக இருந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2021, 04:36 PM IST
  • எய்ட்ஸ் என்ற கொடிய நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் கண்டறியப்படவில்லை.
  • எய்ட்ஸ் மனிதர்களிடமிருந்து முதலில் பரவவில்லை.
  • HIV பதிவுகளில் கேடன் 'Patient Zero' என்று அழைக்கப்படுகிறார்.
Shocking: உலகின் முதல் AIDS நோயாளி யார் தெரியுமா? வியக்க வைக்கும் விவரங்கள்!! title=

புதுடெல்லி: எய்ட்ஸ் குணப்படுத்த முடியாத நோய் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகின் முதல் எய்ட்ஸ் நோயாளி ஒரு பெண்ணோ ஆணோ அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? பாதுகாப்பற்ற செக்ஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது என்பதை எல்லோரும் இப்போது அறிந்து கொண்டனர். ஆனால் இந்த நோய்த்தொற்றின் முதல் நோயாளி யார் என்று பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. இந்த நோய் தொடர்பான சில உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

எய்ட்ஸ் பற்றிய கேள்விப்படாத உண்மைகள்

பல ஏழை மற்றும் பின்தங்கிய நாடுகளில் இன்னும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் இந்த நோய் அப்பகுதிகளில் வேகமாக பரவுகிறது. இருப்பினும், முன்பை விட இது குறித்து மக்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் குணப்படுத்த முடியாத நோய்

எய்ட்ஸ் (AIDS) என்ற இந்த கொடிய நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பாக இருப்பதே இப்போதைக்கு இதன் சிகிச்சையாகும். இதற்காக மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்த நோய்த்தொற்று பரவுவதற்குப் பின்னால் பாதுகாப்பற்ற உடலுறவுதான் காரணம் என்று நம்பப்படுகிறது.

எய்ட்ஸ் மனிதர்களிடமிருந்து முதலில் பரவவில்லை

உலகில் எய்ட்ஸ் முதலில் எவ்வாறு பரவியது என்பதை அறிந்து நீங்கள் திகைத்துப் போவீர்கள். முதன் முதலில் HIV நோயால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு இந்த வைரஸ் எங்கிருந்து பரவி இருக்கும் என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது.

HIV-யின் முதல் நோயாளி ஒரு சிம்பன்சி (Chimpanzee) என்பதை அறிந்து நீங்கள் திகைத்துப் போவீர்கள். இந்த சிம்பன்சியின் உடலில் இந்த ஆபத்தான வைரஸ் ஏற்கனவே இருந்தது. அது மனிதர்களிடையே எவ்வாறு பரவியது என்று நீங்கள் இப்போது சிந்திக்கக்கூடும்.

ALSO READ: இந்த கோயிலில் அந்தி வேளைக்குப் பின் தங்கினால் கல்லாகிப் போவீர்களாம்!!

இங்கிருந்து வைரஸ் பரவியது

இந்த HIV சிம்பன்சி 1920 இல் காங்கோவின் (Congo) கேமரூன் காட்டில் ஒரு வேட்டைக்காரரைத் தாக்கியது. வேட்டைக்காரர் முதலில் சிம்பன்சியை காயப்படுத்தினானர். ஏற்கனவே அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது. பின்னர் சிம்பன்சி வேட்டைக்காரரை தாக்கியது. இந்த தாக்குதலில் வேட்டைக்காரரும் காயமடைந்தார்.

இந்த நேரத்தில், சிம்பன்சியின் இரத்தம் வேட்டைக்காரனின் உடலுக்குள் சென்றது. இந்த வழியில் இந்த கொடூரமான HIV வைரஸ் முதன் முதலாக மனித உடலில் புகுந்தது.

அமெரிக்க ஆராய்ச்சியின் அறிக்கை

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் அறிக்கை இதை ஏற்கவில்லை. ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஜோடியின் மூலம் AIDS நோய் உலகில் பரவியது என அந்த அறிக்கை கூறுகிறது. அறிக்கையின்படி, 1981 ஆம் ஆண்டில் முதன்முறையாக அமெரிக்காவின் (America) லாஸ் ஏஞ்சல்ஸில் 5 இளைஞர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

யார் அந்த Patient Zero

எனினும், எய்ட்ஸின் முதல் பதிவு செய்யப்பட்ட நோயாளி கேடன் டுகாஸ் ஆவார். இவர் ஒரு ஒரு விமான உதவியாளராக இருந்தார். அவர் இந்த நோயைப் பற்றி அறிந்திருந்தார். ஆனால் HIV நோயின் ஆபத்துகளைப் பற்றி அறிந்திருந்தபோதும் இந்த இளைஞன் மற்ற பலருடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்த நோயை பலருக்கு பரப்பினார். HIV பதிவுகளில் கேடன் 'Patient Zero' என்று அழைக்கப்படுகிறார்.

92 சதவீத ஆண்களுக்கு நோய்த்தொற்றுகள் இருந்தன

AIDS பற்றி அறியப்பட்ட பிறகு, எட்டு வருடங்களுக்கு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் ஆண்களாக இருந்தனர் என்பதை அறிந்து நீங்கள் திகைத்துப் போவீர்கள். இதற்குப் பிறகு, இந்த ஆபத்தான வைரஸின் தொற்று மெதுவாக பெண்களுக்கும் பரவியது.

ALSO READ: நீங்க செய்யும் வேலை கடினமானது என நினைத்தால் இந்த வீடியோவை பாருங்க!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News