’என்னயா வீடியோ எடுக்கிற’ முட்ட வந்த குட்டி யானையின் சுட்டித்தனமான வீடியோ

என்னையா வீடியோ எடுக்கிற என வீடியோகிராபரை முட்ட வந்த குட்டி யானையின் சுட்டித்தனமான செய்கை வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 1, 2022, 01:31 PM IST
  • சுட்டி தனமாக இருக்கும் குட்டி யானை வீடியோ
  • வீடியோ எடுத்தவரை முட்ட வருகிறது
’என்னயா வீடியோ எடுக்கிற’ முட்ட வந்த குட்டி யானையின் சுட்டித்தனமான வீடியோ title=

விலங்குகளுக்கு இருக்கும் சுட்டித்தனமான வீடியோக்கள் எப்போதும் இணையவாசிகளை கவர தவருவதில்லை. அதுவும் புத்திசாலித்தனமான விலங்காக சொல்லப்படும் யானை வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது. அவற்றின் மூர்க்கதனமான தாக்குதல் வீடியோவாக இருந்தாலும், சுட்டித்தனமான வீடியோவாக இருந்தாலும் பார்ப்பதற்கு ஆர்வமாக நெட்டிசன்கள் இருக்கின்றனர். குறிப்பாக, குட்டி யானைகளின் சுட்டித்தனம் கொண்ட செய்கைகளை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அப்படியான வீடியோ ஒன்று தான் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ!

காட்டுப்பகுதிக்குள் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் ஒரு குழுவாக இருக்கிறது. அப்போது, வீடியோ ஒருவர் எடுப்பதை பார்த்த குட்டியானை அவரை நோக்கி ஓடி வந்து முட்ட வருவதுபோல் செய்கை செய்கிறது. இதனையடுத்து அந்த குட்டியானை மற்றொரு புதருக்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. அதனை பார்ப்பதற்கு மிகவும் கியூட்னஸாக இருக்கிறது. சுமார் 12 நொடிகள் மட்டுமே இருக்கும் அந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேலாக பார்வைகளைப் பெற்றுள்ளது.

கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், குழந்தை யானை குட்டிகள் எப்போதும் ஸ்பெஷல் தான். அவற்றை பார்த்தாலே மகிழ்ச்சி தானாக வந்துவிடும். இந்த வீடியோவை பார்க்கும்போதும் அப்படியான மகிழ்ச்சி தான் எனக்கும் வந்தது. இந்த குட்டி யானை மிகவும் அழகாகவும் சுட்டித்தனமாகவும் இருக்கிறது. அதனுடைய அழகான முரட்டுத் தனம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என கூறியுள்ளார். அவரின் இந்த கமெண்டுக்கு பலர் லைக்குகளை அள்ளி வீச, குட்டி யானையின் கியூட்னஸூக்கும் ஹார்ட்டின் பறக்கவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News