வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
காட்டில் பலவித உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் சில மனிதர்களின் நடமாட்டத்தையும், அவர்கள் அருகில் இருப்பதையும் விரும்புகின்றன. ஆனால், சில விலங்குகளுக்கு இவை பிடிப்பதில்லை. இவை மனிதர்களுக்கு ஆபத்தாக மாறி விடுகின்றன. இவை மனிதர்கள் அருகில் வருவதை விரும்புவதில்லை.
மனிதர்களுக்கும் இவற்றிலிருந்து தள்ளி இருக்க அறிவுறுத்தப்படுகின்றது. ஏனெனில் இவற்றின் பிடியில் சிக்கிவிட்டால் மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகின்றன. இவற்றைத் தவிர, பாம்புகளும் மிக ஆபத்தானவையாகவே உள்ளன.
மேலும் படிக்கவும் | பதட்டத்தின் உச்சக்கட்டம்: நாகப்பாம்பிடம் சிக்கிய பாம்பு...உயிர் பிழைக்குமா?
உலகில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் காணப்பட்டாலும், அவற்றில் சில பாம்புகள் மட்டுமே விஷப்பாம்புகளாகவும் கொடிய வகை பாம்புகளாகவும் உள்ளன. இந்த பாம்புகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பாம்புகளும் மனிதர்களைக் கண்டு பயந்து ஓடத் தொடங்குகின்றன. ஆனால் சில சமயங்களில் அவற்றின் தாக்குதலுக்கு மக்களும் பலியாக வேண்டியிருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்பவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.
ஒரு பெரிய பாம்பு திடீரென்று காட்டில் ஒரு நபரைத் தாக்குகிறது மற்றும் அவரைக் கடிக்க அவரைப் பின்தொடர்கிறது. காட்டில் புகைப்படம் எடுக்க ஒருவர் சென்றுள்ளதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் ஒரு மிருகத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று ஒரு பாம்பு அவரைத் தாக்குகிறது. அதன் பிறகு அந்த நபர் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார்.
ஆனால் பாம்பு அவரை விடுவதாக இல்லை. அதுவும் வேக வேகமான அவரை பின்தொடர்கிறது. வீடியோவை பார்க்க பயமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாம்பு அவரை கடித்து விட்டது என்றே தோன்றுகிறது. ஆனால், வீடியோ பார்ப்பவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அந்த நபர் பிழைத்துக்கொள்கிறார்.
பாம்புகளிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோமோ அவ்வளவு நல்லது என ஏன் கூறுகிறரகள் என இந்த வீடியோவைப் பார்த்தால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.
பாம்பு மனிதனை துரத்தி துரத்தி விரட்டும் அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்
காண்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் fique.off என்ற ஐடியில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளன. மேலும், இந்த வீடியோவுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இந்த வீடியோவுக்கு பல இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | பிளாஸ்டிக் கேனில் சிக்கிய சிறுத்தையின் தலை; மனித அலட்சியத்தால் ஏற்பட்ட அவலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR