பிஸியான வாழ்க்கையில், மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறார்கள். அதிகாலையில் எழுந்த உடனே, பூங்காவிற்கு சென்று வாக்கிங், ஜாகிங் எக்சர்சைஸ் செய்வது டல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தானே? உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்பவர். தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே செலவௌ செய்கின்றனர். காடு கொடுத்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக தோப்புக்காரணம் இலவச பேருந்து டிக்கெட்டுகளைப் பெறுங்கள் என்று சொல்லும் நாடு எது தெரியுமா?
தோப்புக்கரணம் போட்டால் இலவச பேருந்து டிக்கெட் தரும் நாடு ருமேனியா. ருமேனியா தனது குடிமக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு இளம் பெண் இயந்திரத்தின் முன் 20 தோப்புக்கரணம் போடுகிறார்.
மேலும் படிக்க | மச்சினிச்சி போட்ட ஆட்டத்துக்கு மாப்பிள்ளையின் ரியாக்ஷன்; வைரல்
அவருடைய தோப்புக்கரணம் 20 என்ற எண்ணிக்கையை அடைந்தவுடன் அவருக்கு முன்னால் உள்ள இயந்திரத்திலிருந்து ஒரு பஸ் டிக்கெட் வருகிறது. இந்த வீடியோவை Instagram பயனர் @alinabzholkina பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. இது பதிவேற்றப்பட்டதிலிருந்து, இது ஆயிரக்கணக்கானவர்கள் லைக் போட்டுள்ளனர். "பணத்தை சேமித்துக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இப்படித்தானா?" என்று பதிவிட்டுள்ளார்.
உடற்பயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாகவும் செயல்பாட்டுடனும் வைத்திருக்கும் ஒரு உடல் செயல்பாடு ஆகும். உடல் எடையை குறைத்தல் அல்லது பராமரிப்பது, தசைகளை வலுப்படுத்துதல், தடகள செயல்திறனை மேம்படுத்துதல், சில மூட்டுகளை இயக்கத்தில் வைத்திருப்பது மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது என பல்வேறு விசயங்களுக்கு உடற்பயிற்சி உதவுகிறது.
அதிலும் குறிப்பாக தோப்புக்கரணம் வழக்கமான மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதயம் மற்றும் இரத்த நாள நோய்கள், வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் படிக்க | 'ஹலோ பிரதர்..இது எங்க ஏரியா': சிறுத்தையை ஓட ஓட விரட்டிய குரங்குகள், வைரல் வீடியோ
உடற்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தை நீக்குகிறது, நேர்மறையான மனநிலையை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான உடலின் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள 'சோலியஸ்' எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது.
குழந்தை பருவ உடல் பருமன் உலகளாவிய கவலையாக உள்ளது. அதன் பலதரப்பட்ட நன்மைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார வல்லுநர்கள் உடற்பயிற்சியின் நன்மைகளை "அதிசயம்" அல்லது "அதிசய" மருந்து என்று குறிப்பிடுகின்றனர்.
மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ