விஜய்-ன் பிகில் திரைப்பட "வெறித்தனம்" பாடல் வெளியானது!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "வெறித்தனம்" பாடல் வெளியானது!

Last Updated : Sep 1, 2019, 06:50 PM IST
விஜய்-ன் பிகில் திரைப்பட "வெறித்தனம்" பாடல் வெளியானது! title=

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "வெறித்தனம்" பாடல் வெளியானது!

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விஜய்யின் பிகில். வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் டைட்டில் சாங்கான வெறித்தனம் பாடல் வெளியானது.

இந்தப் பாடலை முதன்முறையாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கின்றார். இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவை பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவுடனே ஆர்.டியை தெறிக்க விட்டு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப்,  விவேக்,  பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை விஜய் பாடியுள்ளார். கடைசியாக பைரவா படத்தில் பாப்பா பாப்பா பாடலை விஜய் பாடியிருந்தார். 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் குரலில் இப்பாடல் வெளியாவதால்., விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

Trending News