Accident Video: ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!

கார் பந்தயத்தை படம் எடுத்துக் கொண்டிருந்த பெண், இந்த எதிர்பாராத விபத்தையும் பதிவு செய்தார். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 10:35 AM IST
  • ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்
  • பந்தயப் பாதையில் கார்கள் மோதல்
  • வீடியோ எடுத்தப் பெண் மயிரிழையில் உயிர் பிழைத்தார்
Accident Video: ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!  title=

Car Racing Accident Video: நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோவைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படும். கார் பந்தயத்தை படம் எடுத்துக் கொண்டிருந்த பெண், இந்த எதிர்பாராத விபத்தையும் பதிவு செய்தார். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கார் பந்தயம் மிகவும் பிரபலமான விளையாட்டு, மிகவும் பரபரப்பானது. கார் பந்தயத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் அதில் உள்ள ஆபத்தும் நன்றாகவேத் தெரியும். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்படும் விபத்து ஏற்படுத்தும் காயங்களும், பாதிப்பும் யாராலும் கணிக்கவே முடியாது.

பந்தயப் பாதையில் செல்லும் கார்கள் மோதும் போது, ​​உயிருக்கே ஆபத்தாகிறது. அப்படிப்பட்ட மயிர் கூச்செறியும் ஒரு வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கார் பந்தயத்தின் போது விபத்து
நெஞ்சை பதற வைக்கும் இந்த காணொளியை பார்த்தவுடன் உங்களுக்கு மயிர் கூச்செறியும். கார் பந்தயத்தின் ஒரு டிராக்கை இந்த வீடியோவில் காணலாம். கார் பந்தயத்தை  பெண் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு கார் மீது மற்றொரு கார் மோதி, கார் காற்றில் பறக்கிறது.  

இதை வீடியோ எடுத்த பெண், நொடியில் அங்கிருந்து ஓடினார். அதனால் அவர் உயிர் பிழைத்தார். வீடியோ எடுத்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் இல்லையென்றால் அவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார். 

ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!

இந்த கார் பந்தய வீடியோ ஆஸ்திரேலியாவில் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இரண்டு கார்கள் பயங்கரமாக மோதுகின்றன. ரேஸ் டிராக்கில் நடைபெற்ற இந்த விபத்தின் போது, ​​கார்களின் வேகம் அதிகமாக இருந்ததால், வேலியில் கார் மோதியது. இங்கு நின்று கொண்டு அந்த பெண் கார் பந்தயத்தை வீடியோ எடுக்கிறார். அந்தப் பெண்ணுக்கு மிக அருகில் கார் விழுந்து இரும்பு வேலியில் மோதியதை வீடியோவில் தெளிவாகக் காணலாம்.

வீடியோவைப் பார்க்கும்போது, ​​இந்த மோதலில் பந்தய வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இருப்பினும், ஓட்டுநரின் பாதுகாப்புக் கவசங்களால் அவருக்கு அதிக காயம் ஏற்படவில்லை. 

ஸ்பீட்கேஃப் டிவி என்ற யூடியூப் சேனலில் இந்த விபத்து வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. பறக்கும் போது கார் தன்னிடம் வந்ததாக வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்த பெண் கூறியுள்ளார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அதில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி...

ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News