காதலுக்கு கலாச்சாரம், எல்லை, இனம், மதம் என எந்த விதமான எல்லையும் கிடையாது. சமீபத்தில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த பாரம்பரிய திருமண விழா இதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. துருக்கிய மணப்பெண்ணும் இந்திய மண்மகனும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய மணமகன் மது சங்கீர்த் 2016 ஆம் ஆண்டு மணமகள் ஜிஜெமை (Gizem) பணி தொடர்பான பிராஜெக்டில் சந்தித்தார். இருவரும் நண்பர்களானார். சிறிது காலத்திற்குப் பிறகு, மது, வேலை சம்பந்தமாக, Gizem வசித்த துருக்கிக்கு சென்றார். அங்கு இருவரும் மீண்டு சந்தித்த பிறகு, ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!
இருப்பினும் இருவரின் குடும்பத்தினரையும் சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இருப்பினும், இறுதியில், இருவரும் இந்த முயற்சியில் வெற்றி பெற்றனர். ஈரு தரப்பு பெற்றோர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த காதல் ஜோடியின் திருமணம் 2019 ஆம் ஆண்டு நிச்சயம் ஆனது. அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக, அவர்களின் திருமணம் ஒத்தி போடப்பட்டது.
இறுதியாக இந்த காதல் ஜோடி, சென்ற ஜூலை மாதம் துருக்கிய பாரம்பரியத்தை பின்பற்றி துருக்கியில் திருமணம் செய்து கொண்டது. பின்னர் இந்தியாவில் இரண்டாவது முறையாக ஒரு பாரம்பரிய தெலுங்கு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர், இதில் Gizem அழகான புடவை அணிந்து அனைத்து இந்து சடங்குகளையும் செய்தார். ஒரு நேர்காணலில், பேசிய Gizem தனது குடும்பம் இந்திய கலாச்சாரத்தை பெரிதும் விரும்புகிறது என்றும், கணவரின் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சிறப்பாக தொடர்புகொள்வதற்காக தெலுங்கு மொழியை எவ்வாறு கற்றுக்கொள்கிறார் என்பதையும் தெரிவித்தார்.
ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR