பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் சாபட்ற மாதிரி: மாஸ் காட்டும் நபரின் வைரல் வீடியோ

சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகளையும் ஒரு நபரையும் காண முடிகின்றது. இதில் காணும் காட்சியைப் பார்த்தால் யாராலும் நிச்சயமாக நம்ப முடியாது. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 26, 2021, 03:23 PM IST
பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் சாபட்ற மாதிரி: மாஸ் காட்டும் நபரின் வைரல் வீடியோ

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புன் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. 

சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகளையும் (Python) ஒரு நபரையும் காண முடிகின்றது. இதில் காணும் காட்சியைப் பார்த்தால் யாராலும் நிச்சயமாக நம்ப முடியாது. 

சில விநாடிகளே கொண்ட இந்த வீடியோவில், ஒரு நபர் ஒய்யாரமாக படுத்திருக்கிறார். அவர் முன் திடீரென இருபது அடி நீளமுள்ள இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் வருகின்றன.

ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு பெரிய மலைப்பாம்புகள் இவ்வளவு அருகில் இருந்தும் அவர் சிறிதும் பயப்படாமல், அவற்றுடன் விளையாடத் தொடங்குகிறார். அவரும் அந்த இரண்டு நாகங்களை பார்த்தப்டி படுத்துகொண்டு, அவற்றுடன் பேச ஆரம்பிக்கிறார்.

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், பாம்புகளும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அந்த நபர் மிக இயல்பாக பாம்புகளை பரிவுடன் தடவிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

ALSO READ:நாகப்பாம்பு vs மலைப்பாம்பு: திக் திக் நிமிடங்கள், கடைசில ஒரு ட்விஸ்ட், வீடியோ வைரல் 

இந்த அதிசய வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் helicopter_yatra என்ற பெயர் கொண்ட ஒரு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. இந்த வீடியோவுக்கு (Viral Video) நெட்டிசன்களும் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

ஒரு மலைப்பாம்பு மற்றும் ஒரு மனிதனின் இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

ALSO READ:Viral Video | பாம்பு Vs பல்லியின் உக்கிரமான சண்டையில் ஜெயித்தது யார்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News