நாகப்பாம்பு vs மலைப்பாம்பு: திக் திக் நிமிடங்கள், கடைசில ஒரு ட்விஸ்ட், வீடியோ வைரல்

நாகப்பாம்பும் மலைப்பாம்பும் மாறி மாறி ஒன்றை ஒன்று தாக்கிகொள்கின்றன. எனினும், இரண்டாலும் மற்றதை வீழ்த்த முடியவில்லை. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 29, 2021, 02:04 PM IST
நாகப்பாம்பு vs மலைப்பாம்பு: திக் திக் நிமிடங்கள், கடைசில ஒரு ட்விஸ்ட், வீடியோ வைரல்

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புன் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது சண்டையில் ஈடுபட்டிருக்கும் இரு பாம்புகளின் வீடியோ அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. 

இந்த வீடியோவில் ஆபத்தான நாகப்பாம்புக்கும் (King Cobra) பயங்கரமான மலைப்பாம்புக்கும் இடையே நடக்கும் சண்டையை காண முடிகின்றது. இரு பாம்புகளுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டை இதுவரை கண்டிராத ஒன்றாக இருக்கிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், நாகப்பாம்பு தண்ணீரில் நீந்தி முன்னேறிச் செல்வதைக் காண முடிகின்றது. மறுபுறம் பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு அங்கு வந்து அதை தாக்குகிறது. இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வு காண்பவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த அசத்தலான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த சண்டையில் உயிர் பிழைத்த நாகப்பாம்பு அங்கிருந்து செல்ல முயறிக்கிறது. ஆனால், நாகப்பாம்பை பின்தொடரும் மலைப்பாம்பு (Python) தன் வாயால் அதை கவ்விக்கொள்கிறது. நாகப்பாம்பை உயிருடன் விழுங்க, அதன் உடலை ஒட்டிச் செல்கிறது.

ALSO READ: Black Cobra Viral Video: பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!! 

ஆனால், நாகப்பாம்பு அதை விட புத்திசாலியாக இருக்கிறது. தான் தாக்கப்பட்டவுடன் அது, மலைப்பாம்பின் உடலோடு ஒட்டிக்கொண்டு தன் வாய்ப் பகுதியை மறைத்துக்கொள்கிறது.

இதற்குப் பிறகு திரையில் காணும் காட்சிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

தன் வாய்ப்பகுதியை காத்துக்கொள்ளும் நாகப்பாம்பு பின்னர் மலைப்பாம்பைத் தாக்கியது. எனினும், மலைப்பாம்பு அதைத் தொடர்ந்து தாக்குகிறது. நாகப்பாம்பை அப்படியே விழுங்கிவிட மலைப்பாம்பு முயற்சி செய்கிறது. ஆனால் அதனால் வெற்றி பெற முடியவில்லை.

நாகப்பாம்பை விழுங்க, மலைப்பாம்பு அதன் வாயை இலக்காக வைக்கிறது. ஆனால் நீண்ட சண்டைக்குப் பிறகும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. நாகப்பாம்பும் மலைப்பாம்பும் மாறி மாறி ஒன்றை ஒன்று தாக்கிகொள்கின்றன. எனினும், இரண்டாலும் மற்றதை வீழ்த்த முடியவில்லை. இரண்டுக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர், இரு பாம்புகளும் தங்கள் சண்டையை கைவிட்டு தங்கள் வழியில் செல்வதையும் வீடியோவின் (Viral Video) இறுதியில் காண முடிகின்றது.

நாகப்பாம்பு மற்றும் மலைப்பாம்பின் இந்த வீடியோ, nurhidayat hdy என்ற சேனலால் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் இதற்கு பல வித கமெண்டுகளை தெரிவித்துள்ளனர்.

ALSO READ:Viral Video: பாம்பு மசாஜ் செய்யும் திக் திக் வீடியோ: தைரியம் இருந்தா மட்டும் பாருங்க!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News