யூடியூப்பருடன் காதல்; கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே யூடியூபரை காதலித்து, காதல் தோல்வியால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2021, 12:50 PM IST
யூடியூப்பருடன் காதல்; கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை title=

திருச்சி திருவெறும்பூர் அருகே யூடியூபரை காதலித்து, காதல் தோல்வியால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி (Tiruchirappalli) திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் தனரக்ஷனா (22) ஆவார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு  படித்து வந்தார். இவர் சடந்த சில மாதங்களாக யூடியூபர் சூர்யா (Youtuber Suriya) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ALSO READ | நடிகை தூக்கிட்டு தற்கொலை; வெளியான Shocking காரணம்

இந்நிலையில் தற்போது கடந்த 7 ஆம் தேதி மதியம் பிராங்க் ஸ்டார் சூர்யாவுடன் பேசும்போது இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனரக்ஷனா கைகளை அறுத்து வீட்டில் தூக்கு மாட்டி கொண்டுள்ளார். தூக்கு மாட்டி கொண்ட தனரக்ஷனாவின் நிலை ஆபத்தாக இருந்த  நிலையில் அவரது பெற்றோர்கள் காப்பாற்ற உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவே உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் தனரக்ஷனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பிராங்க் பாஸ் யூடியூப்பர் சூர்யாவை நவல் பட்டு போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர். வீட்டுக்குள் பிரச்சனையை உருவாக்குவது போல பிராங்க் செய்து பார்வையாளர்களை பெற்ற, சூர்யாவின் வீட்டிற்குள் உண்மையிலேயே தற்போது பிரச்சனை உருவாகி உள்ளது குறிப்பிடதக்கது.

யார் இந்த பிராங்க் ஸ்டார் சூர்யா

சென்னையை சேர்ந்த பிராங்க் பாஸ் என்ற பெயரில் யூடியூப்பில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வரும் யூடியூப்பர் சூர்யா. தலையில் கலரிங் செய்து கொண்டு புள்ளிங்கோ போல வலம் வந்தாலும், தனது தாயிடம் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டு அவரை ஏமாற்றுவது போல நடித்து தர்ம அடிவாங்கியே பிரபலமானவர் சூர்யா.

ALSO READ | WATCH: வைரலாக ஒரே வீடியோவில் அம்மாவுக்கும், தங்கைக்கும் லிப்லாக்....

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News