Viral Video: ஆவியாகிப்போகும் மாய நீர் வீழ்ச்சியின் கண்கொள்ளாக் காட்சி

ஆவியாகிப்போகும் நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2022, 01:56 PM IST
  • மாயமாகும் மேற்கு தொடர்ச்சி மலை நீர்வீழ்ச்சி
  • ஆகாயத்தில் ஆவியாவதைப் பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
Viral Video: ஆவியாகிப்போகும் மாய நீர் வீழ்ச்சியின் கண்கொள்ளாக் காட்சி title=

பருவமழைக்காலம் தொடங்கிவிட்டாலே திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்படுவதை மலைகளில் பார்க்கலாம். வழக்கமாக இருக்கும் பெரும் நீர்வீழ்ச்சிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டுவதுபோல், இந்த நீர்வீழ்ச்சிகளிலும் மழைநீர் ஆர்பரித்துக் கொட்டும். அந்தநேரத்தில் மலை பிரதேசங்களுக்கு நீங்கள் சுற்றுப் பயணம் செய்தால், இப்படியான அழகிய காட்சிகளை தவறாமல் கண்டுகளிக்கலாம். இமயமலை முதல் தென்னிந்தியா முழுவதும் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளை நீங்கள் கண்டு ரசிக்க முடியும். 

மேலும் படிக்க | கடற்கரையில் குழந்தை போல் மணல் வீடு கட்டி விளையாடும் நாய்களின் வீடியோ வைரல்!

இப்போது பருவமழைகாலமாக இருப்பதால் மலை பிரதேசங்களில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி வருகின்றன. ஆர்பரித்துக் கொண்டு நீரைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மெய்சிலிர்க்கின்றனர். வீடியோவாக பதிவு செய்து அந்தக் காட்சிகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களில் பச்சை பசேலென இருக்கும் மலைப் பிரதேசத்தில் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் தண்ணீர் வானுயரத்தில் இருந்து நிலத்தைநோக்கி கொட்டுகின்றன. இவற்றை ரசிப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதேநேரத்தில், ஆகாய உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர் கீழே விழாமல், அப்படியே ஆவியாகி மேகமூட்டத்துக்கு செல்வதை பார்த்தால் வியப்படையாமல் எப்படி இருக்க முடியும்?.

இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றாக தான் இதனை பார்க்க முடியும். வெளிநாடுகளில் எல்லாம் இந்த பேரதிசயம் நடக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் நீர்வீழ்ச்சி ஒன்றில், நீர் கீழே விழாமல் அப்படியே மேல்நோக்கி சென்று ஆவியாகிவிடுகிறது. இந்த அரியக் காட்சியின் வீடியோ இப்போது இணையப்பக்கங்களில் வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | தண்ணிக்குள்ள இருந்தாலும் நான் தண்ணிப்பாம்பு இல்ல அனகோண்டா: சீறும் பாம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News