வைரல் வீடியோ: இணைய உலகம் ஆச்சரியங்களை அள்ளி தருவதில் நம்மை ஒரு போதும் ஏமாற்றுவதில்லை. அந்த வகையில் "டைனோசர் குட்டிகள்" கூட்டம் ஆற்றங்கரையில் ஓடுவதைக் காணும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் Buitengbieden என்பவர் பகிர்ந்துள்ளார். பதிவின் தலைப்பு, "எனக்கு சில வினாடிகள் ஆனது". இந்த பதிவு ட்விட்டர் பயனர்களை ஆச்சர்யத்திலு குழப்பத்திலும் ஆழ்த்தியது
வீடியோவில் காணப்படும் உயிரினங்கள், ஆற்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நீண்ட கழுத்துடன் கூடிய இளம் டைனோசர் இனத்தைச் சேர்ந்த சௌரோபாட்கள் போல காட்சியளிக்கின்றன. 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டர் பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் டைனோசர்களின் கூட்டம் அல்ல என்பதை சிறிது நேரம் உற்று பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. "கோடிமுண்டிஸ் என்றும் அழைக்கப்படும் கோட்டிகள், புரோசியோனிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகள். "கோடிமுண்டி" என்ற பெயர் பிரேசிலின் துபியன் மொழிகளிலிருந்து வந்தது. இந்த வைரல் வீடியோ ட்விட்டரில் 10.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது மற்றும் 48,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பயனர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “நான் இதை எனது 9 வயது மகனிடம் காட்டினேன், என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அவனுக்கு சில வினாடிகள் ஆனது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
வைரலான வீடியோவை இங்கே காணலாம்:
கோட்டிகளின் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும், வளைந்து கொடுக்கும் தன்மையுடையது. கோட்டிகளின் உடல் சுமார் 66 செ.மீ. நீளம் இருந்தால், அதன் வால் இன்னொரு 66 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இது ஒரு வெப்பமண்டல பாலூட்டி இனமாகும். பொதுவாக தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட ஆர்ஜெண்டீனா வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.
கோட்டிகள் உணவு தேடித் திரியும்போது எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டும் மண்ணை தோண்டிக் கொண்டும் இருக்கும். இதனால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR