புறாவிற்கு தண்ணீர் வைக்கும் சிறுவன்! வைரலாகும் வீடியோ!

சிறுவன் ஒருவன் வீட்டின் மேற்கூரையின் மீது அமர்ந்திருக்கும் பறவைக்கு மனிதநேயத்தோடு தண்ணீர் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2022, 07:50 PM IST
  • வீட்டின் மீது உள்ள புராவிற்கு தண்ணீர் வைக்கும் சிறுவன்.
  • சிறுவனின் இந்த செயலுக்கு குவியும் பாராட்டு.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
புறாவிற்கு தண்ணீர் வைக்கும் சிறுவன்! வைரலாகும் வீடியோ! title=

பொதுவாக பலரும் அவரவர் வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தான் உணவோ அல்லது அருந்த நீரோ கொடுப்பார்கள், ஆதரவற்று வெட்ட வெளியில் திரியும் பறவை அல்லது விலங்குகளுக்கு பெரும்பாலும் யாரும் உணவோ அல்லது நீரோ வழங்கமாட்டார்கள்.  ஆனால் இங்கு ஒரு சிறுவன் அவனது வீட்டு கூரையின் மீது அமர்ந்திருக்கும் பறவை ஒன்றுக்கு தண்ணீர் கொடுக்கின்றான், இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி சிறுவனை நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் 'ரேண்டம் ஃபேக்ட்ஸ்' என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் வீட்டின் மேல் இருக்கும் பால்கனியின் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறான், அவன் இருக்கும் இடத்திற்கு கொஞ்சம் கீழே வீட்டின் மேற்கூரையின் மீது பறவை ஒன்று அமர்ந்து இருக்கிறது.  அந்த பறவையின் தாகத்தை தணிக்க அச்சிறுவன் ஒரு கரண்டியில் தண்ணீரை எடுத்து பறவை அருகே கொண்டு செல்கிறான், அந்த தண்ணீர் பரவி அமர்ந்திருக்கும் ஓடுகளில் ஊற்றிவிடுகிறது.  பின்னர் சரியாக பறவையின் வாய்க்கு அருகே அந்த கரண்டியை கொண்டு செல்கிறான், அதனையடுத்து அந்த கரண்டியிலுள்ள நீரை அப்பறவை வருந்துகிறது.

 

சிறுவனின் இந்த மனிதாபிமான செயல் சிலிர்த்து போய் சில்லறையை சிதற விடும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  'சுதந்திரமாக வெளியில் இருக்கும் பறவைக்கு கூண்டிற்குள் இருந்து சிறுவன் தண்ணீர் கொடுக்கிறான்' என்று ஒருவர் நக்கலாக கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News