மலைப்பாம்பின் பெயரே போதுமானது. அதன் பெயரைக் கேட்டாலே மனதில் அச்சம் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. விலங்குகளின் அனைத்து வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன என்றாலும், பயங்க்ரமான விஷப் பாம்புகள் மற்றும் மலைப்பாம்புகளின் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு எனலாம். இந்நிலையில், மலைப்பாம்பும் உலகின் மிக வினோதமான விலங்கும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அசையாக்கரடி (sloth) தென் அமெரிக்காவிலே வாழும் ஒரு விலங்கு. இரவிலே இரைதேடும் இந்த விலங்கு ஒரு தாவர உண்ணி என்றாலும், பூச்சி, பல்லி முதலியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் "அசையா"க் கரடி எனவும் அழைக்கப்படுகிறது. இதன் உடல் இயக்கமும் மிக மிக மெதுவாகவே நடக்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட ஆகும். அதன் அசையாத்தன்மை காரணமாக எளிதில் வேட்டையாடப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் மரத்திலேயே இது வசிக்கும்.
மலைப்பாம்பின் அருகில் வந்த அசையாக்கரடி
சமூக ஊடகங்களில் ஒரு பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு மலைப்பாம்பு காட்டில் ஒரு இடத்தில் அமைதியாக இருப்பது போல் தெரிகிறது. இதற்கிடையில், வினோதமாக தோற்றம் அளிக்கும் விலங்கு பின்னால் இருந்து மெதுவாக நகர்ந்து வருகிறது. அதை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. இதற்கிடையில், அந்த விலங்கு மலைப்பாம்புக்கு மிக அருகில் சென்றது. அப்போதும் மலைப்பாம்பு அசையவில்லை.
மேலும் படிக்க | உண்மை காதலுக்கு வயதில்லை... 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன்!
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
வினோதமாக தோற்றமளிக்கு அசையாக்கரடி என்னும் விலங்கு மலைப்பாம்பின் மேல் தன் கால் ஒன்றை வைத்து அழுத்தி சென்றது, ஆனால் மலைப்பாம்பு அசையாமல் இருப்பதைக் காணலாம். உலகின் மிக மெதுவான விலங்கு என்று அழைக்கப்படும் ஸ்லோத் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். தரையில் இருக்கும் போது, ஒரு நிமிடத்திற்கு 1.8-2.4 மீட்டர் மட்டுமே நடக்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த மலைப்பாம்பை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ