சமீப காலமாக ATM கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கொள்ளையர்கள் கும்பல் ஒன்று பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபியை திருடி, ஏடிஎம் கேபினுக்குள் செலுத்தி இயந்திரத்தை பெயர்த்து எடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 23-24 (சனிக்கிழமை-ஞாயிறு) நள்ளிரவில் மிராஜ் தொழில்துறை நகரத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் அமைந்துள்ள பிரதான சாலை மற்றும் சந்தையில் அந்த நேரத்தில் கணிசமான மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த சம்பவம் ஏடிஎம் மையஹ்ட்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருடப்பட்ட ஜேசிபியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்தனர். ஆனால், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 27 லட்சத்தை அப்படியே விட்டு திடீரென தப்பிச் சென்ற திருடர்கள் கும்பலை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். மிராஜ் புறநகரில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் கிராமவாசி ஒருவரின் ஜேசிபியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆக்சிஸ் வங்கி பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இப்போது திருடர்கள் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி
வீடியோவை இங்கே காணலாம்:
வைரலான சிசிடிவி காட்சிகளில் ஒரு நபர் ஏடிஎம் கேபினுக்குள் நுழைந்து, திடீரென வெளியேறுவதையும், சில நிமிடங்களில் ஜேசிபி இயந்திரம் கண்ணாடி கதவுகளை உடைத்து ஏடிஎம் இயந்திரத்தை, தனது ராட்சத நகங்களால் தாக்குவதையும் காட்டுகிறது. 700 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்ட எஃகு ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து, கேபினில் இருந்து குறைந்தது 5-6 மீட்டர் தூரத்திற்கு மேலே தூக்கி எறிந்ததில் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது.
“அருகிலுள்ள பெட்ரோல் பம்பிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகத்திற்கு உரிய 3-4 நபர்களை அடையாளம் காண முடிந்தது. எங்கள் சிறப்பு குழு இப்போது சாங்லி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகிறது,” என்று திருட்டு முயற்சி நடந்த 72 மணி நேரத்திற்குப் பிறகு மிராஜ் கிராமப்புற காவல் நிலைய அதிகாரி சந்திரகாந்த் பெத்ரே கூறினார்.
கொள்ளை சம்பவத்தின் போது, ஏடிஎம் இயந்திரம் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் சத்தம் கேட்டு, பல உள்ளூர்வாசிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததால், திருடர்கள் பீதியடைந்தனர். ஜேசிபியை அங்கேயே வைத்துவிட்டு ஏடிஎம் மெஷினைத் தொடாமல் தப்பிச் சென்றதாக காவல் நிலைய அதிகாரி பெத்ரே தெரிவித்தார்.
மேலும் படிக்க | Funny Video: இது என்ன சோதனை; கையில் சிக்கவே மாட்டேங்குதே; குழப்பத்தில் பூனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR