அசாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்த சம்பத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.
அசாம் மாநில சட்டமன்ற துணை சபாநாயகராக பாஜக எம்.எல்ஏ., கிரிபாநாத் மல்லா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது தொகுதியான ராதாபரிக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்பு அளித்தனர்.
அப்போது திடீரென யானை தன் உடலைக் குலுக்கியபடி நகரத் தொடங்கியது. தனால் யானை மீது அமர்ந்திருந்த கிரிபாநாத் மல்லா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் தற்போது யானை மீதிருந்து அவர் விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
#WATCH: Newly-elected deputy speaker of Assam assembly Kripanath Mallah falls off an elephant. He was being welcomed by his supporters in
Ratabari, his own constituency, in Karimganj district. The deputy speaker was unhurt in the incident. (06.10.2018) #Assam pic.twitter.com/2UYHkS7zvx— ANI (@ANI) October 8, 2018