சீனாவில் ஷாண்டங் மாகாணத்தில் பிரபலமான ஹாட் டாக் உணவகம் இயங்கி வந்தது. செப்டம்பர் 6 அன்று அந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் தன் குடும்பத்துடன் சென்றுள்ளார். உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் சில பகுதிகளை சாப்பிட்ட பின்னர், இறந்த எலி ஒன்று அதில் இருந்ததை கண்டார். அதைப்பார்த்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர், இந்த தகவல் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டன.
இச்சம்பவத்தை அடுத்து சியாபு சியாபு (Xiabu Xiabu) உணவகத்தை சேர்ந்த அதிகாரி, அந்த தம்பதியருக்கு, உங்கள் குழந்தையை குறித்து கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு 5000 யுவான் (3,000 அமெரிக்க டாலர்) கொடுக்கிறோம் எனக் கூறியதாக கர்ப்பிணிப் பெண் தெரிவித்தார்.
பின்னர் தம்பதியர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனக் கூறினார்.
மருத்துவமனை பரிசோதனைக்கு பின்னர், தம்பதியரருக்கு இழப்பீட்டுத் தொகையாக 5,000 யுவான்கள் (728 அமெரிக்க டாலர்) வழங்குவதாக உணவகம் தெரிவித்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு இந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
This pregnant woman in #China found a dead rat in her hotpot soup pic.twitter.com/5qyWdOd8yW
— SCMP News (@SCMPNews) September 11, 2018
இச்சம்பவத்தை அடுத்து சியாபு சியாபு (Xiabu Xiabu) உணவகத்தின் பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனாவில் மட்டும் 759 உணவகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.