"சண்டக்கோழி 2" எப்படி உருவானது? :விறுவிறுப்பை ஏற்ப்படுத்தும் வீடியோ

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் "சண்டக்கோழி 2" படம் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்ட படக்குழுவினர்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 12, 2018, 08:12 PM IST
"சண்டக்கோழி 2" எப்படி உருவானது? :விறுவிறுப்பை ஏற்ப்படுத்தும் வீடியோ
Pic Courtesy : Youtube

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. 

முதல் பாகத்தின் ஹிட்-க்குப் பிறகு, இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மீண்டும் கைகோர்த்துள்ளனர். அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று "சண்டக்கோழி 2" படம் உருவான விதத்தை வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ:-