12 ஆண்டு..குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பண மழை பொழியும்

Jupiter Transit: குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அவருடைய ராசியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. 5 ராசிக்காரர்களுக்கு இதன் மூலம் அதிக பலன் கிடைப்பதோடு அதிர்ஷ்டமும் பிரகாசிக்கத் தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 30, 2023, 04:22 PM IST
  • விபரீத ராஜயோகம் என்பது என்ன.
  • குரு ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
  • இந்தப் பெயர்ச்சி ராஜயோகத்திற்கு எதிரான நிலையை உருவாக்கும்.
12 ஆண்டு..குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பண மழை பொழியும் title=

விபரீத ராஜயோகம்: வியாழன் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாகக் கருதப்படுகிறது. அவர் பெயர்ச்சி அடையும் போதெல்லாம் 12 ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதன் போது பல வகையான சுப யோகங்களும் உருவாகின்றன. அதன்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் இந்தப் பெயர்ச்சி ராஜயோகத்திற்கு எதிரான நிலையை உருவாக்கும். ஜோதிடத்தில், இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் அதன் பலன் 5 ராசிக்காரர்களிடம் தென்படும், அத்துடன் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கத் தொடங்கும்.

யோகம் எப்போது பலன் தரும்?
யோகம் என்பது சமஷ்கிருதத்தில் இருந்து வந்த சொல். இதற்கு கிரகங்களின் சேர்க்கை அல்லது இணைவு என்று பொருள். பெரும்பாலானோர், இதை அதிஷ்டம் என்று கூறுகின்றனர். ஆனால், யோகமும் அதிஷ்டமும் வேறு. யோகம் சில குறிப்பிட்ட கிரகங்கள் இணையும் போது மட்டுமே ஏற்படும். ஒரு தனித்த கிரகம் ஒருவரின் வாழ்க்கையில் நல்ல அல்லது அசுர பலன்களை கொடுக்க முடியாது. ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சேரும் போது தான் சக்தி அதிகரித்து யோகம் ஏற்படுகிறது. அப்போது தான், திரிகிரக யோகம், புதாத்திய யோகம், நவபஞ்சம ராஜயோகம், பஞ்ச மஹாயோகம், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், ராஜயோகம், விபரீத ராஜயோகம், திரிகோண யோகம் என பல்வேறு யோகங்கள் உருவாகும்.

மேலும் படிக்க | Venus Transit: உச்சத்தை அளிக்கும் சுக்கிரன்... இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் மட்டும் தான்!

விபரீத ராஜயோகம் என்பது என்ன
விபரீதம் என்றால் முற்றிலும் எதிர்பாராத நிலை ஆகும். எனவே, முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில், மிக ஏழ்மையில்  இருக்கும் ஒருவரை அரசனாக்கும் அளவிற்கு உயர்த்தக்கூடியது தான் விபரீத ராஜயோகம். எந்தவிதமான கடின உழைப்பும் இல்லாமல், சுலபமாக அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அந்தஸ்து அல்லது அரச பதவியை விபரீத ராஜயோகம் என கூறுகின்றனர். 

எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்
மிதுன ராசி: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நல்ல செய்தி தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூக கௌரவம் உயரும்.

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களும் குரு பெயர்ச்சியால் ஆதாயம் பெறுவார்கள். புத்தாண்டில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். சமூக மரியாதை கூடும்.

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குரு இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தருவார். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும். புதிய வருமானம் கிடைத்து பொருளாதார நிலை மேம்படும்.

மீன ராசி: குரு மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைதாலும், மீன ராசியினருக்கு நிறைய பலன்களை தருவார். இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறுவதன் மூலம் லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 25 மாதம் வரை இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், சனியால் முன்னேற்றம் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News