4 நாட்களுக்கு பிறகு சனியின் ராசியில் சூரியன் உச்சம், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Sun Transit 2024: வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி கிரங்களின் ராஜாவான சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 9, 2024, 10:55 PM IST
  • உடல்நலத்தில் பிரச்சனை ஏற்படக் கூடும்.
  • அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் மட்டுமே வீசும்.
  • வெளி உணவை சாப்பிவதை தவிர்க்கவும்.
4 நாட்களுக்கு பிறகு சனியின் ராசியில் சூரியன் உச்சம், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சூரியப் பெயர்ச்சி பலன்கள் 2024: வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி கிரங்களின் ராஜாவான சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அதன் பின்னர் அடுத்த மாதம் மார்ச் 14 ஆம் தேதி வரை சூரிய பகவான் இதே ராசியில் தான் பயணிப்பார். தற்சமயம், சூரிய கிரகம் பெயர்ச்சி அடையப் போகும் கும்ப ராசியில் சனி அமர்ந்துள்ளார், இதனால் கும்ப ராசியில் சூரியனின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். மேலும் இந்த நிகழ்வில் சூரிய கிரகத்தின் சேர்க்கை சனியுடன் ஏற்படும். இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களை அள்ளித் தரும், இதனுடன் பண பலன்களை, பல நன்மைகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் எந்த அனைத்து ராசிக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்று அறிந்துக்கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

1. மேஷம்: தொழிலில் லாபம் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வணிக வர்க்கம், சட்டவிரோத செயல்கள் போன்றவற்றில் விலகி இருப்பது நல்லது. பிப்ரவரி இறுதி முதல் மற்றும் மார்ச் தொடக்கம் வரை உங்களின் சகோதரரின் உடல்நலத்தில் பிரச்சனை ஏற்படக் கூடும்.

மேலும் படிக்க | இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!| 

2. ரிஷபம்: இந்த சூரிய பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள், இதற்கு தினம் சூரியனுக்கு தண்ணீர் ஊற்றவும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நடைபயிற்சி, யோகா போன்றவை கட்டாயம் செய்ய வேண்டும். 

3. மிதுனம்: சனியின் ராசியில் பெயச்சியடையப் போகும் சூரியனால் நீங்கள் கடினமாக  உழைக்க நேரிடலாம். இலாப வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாவே வரும். வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பே விட இந்த காலக்கட்டத்தில் சிறப்பாகவே இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் மட்டுமே வீசும்.

4. கடகம்: கடக ராசிக்காரகள் முதலீடு செய்யும் முன் கவனமாக இருக்க வேண்டும், அவசரம் வேண்டாம். மாதக் கடைசியில், மன அழுத்தம் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம், எனவே வெளி உணவை சாப்பிவதை தவிர்க்கவும். 

5. சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்களின் ஈகோவை கைவிடுவதை நன்மை தரும். தொழிலில உங்களின் கூட்டாளியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கிட்னி ஸ்டோன் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

6. கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சுப வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்த இதுவே சரியான நேரம். மனைவியுடன் நேரத்தை கழிப்பீர்கள். இதனால் உங்களின் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

7. துலாம்: இந்த நேரத்தில் துலாம் ராசிக்காரர்கள் பெரிய பொறுப்புகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் சற்று கவனக்குறைவாக இருப்பார்கள், இதை தவிர்த்தால் நன்மை பயக்கும்.

8. விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை திசை திருப்பி சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை தராது. 

9. தனுசு: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். தந்தையின் முழு ஆதரவை பெறுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மக்களின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் எற்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

10. மகரம்: இந்த ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். கிரகங்களின் சேர்க்கையால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஆஸ்துமா நோயாளிகள் கவனமாக இருக்கவும். உடன் வேலை செய்யும் ஊழியர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

11. கும்பம்: இந்த நேரத்தில் அமைதியாக இருந்தால் சமூக மரியாதையைப் பெறலாம். தந்தை மற்றும் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பிபி அதாவது ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்களை கவனித்துக்கொள் வேண்டும்.

12. மீனம்: பழைய கடனால் விமோசனம் பெறுவீர்கள். பயணத்தை புத்திசாலித்தனமாக திட்டமீட்டு முதலீடு செய்யுங்கள். மனைவியுடன் நேரத்தை கழிப்பீர்கள். இதனால் உங்களின் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News