அபூர்வ 'தன ராஜயோகம்' - இனி இந்த 3 ராசிக்காரர்களின் வீடுகளில் ஒரு மாதத்திற்கு பணமழை

ஜோதிடர்களின் கூற்றுப்படி, செப்டம்பர் 18 முதல் புதன்-சனியின் ராசி மாற்றத்தால் அரிய தன ராஜ்யோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் வீடுகளிலும் ஒரு மாதத்திற்கு பண மழை பொழியப்போகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 21, 2023, 06:10 AM IST
  • சனி - புதனின் ராசி மாற்றம்
  • 3 ராசிகளுக்கு ராஜயோகம்
  • அடுத்த ஒரு மாதம் பண மழை
அபூர்வ 'தன ராஜயோகம்' - இனி இந்த 3 ராசிக்காரர்களின் வீடுகளில் ஒரு மாதத்திற்கு பணமழை  title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்தப் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது.  கிரங்கள் நிலை மாறும்போது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் கைடிவரும். ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கொடுக்கும். இப்போது கிரகங்களின் இளவரசர் புதனும் நீதிக் கடவுள் சனியும் செப்டம்பர் 18 ஆம் தேதி ராசி மாற்றமாகியுள்ளனர். இந்த சஞ்சாரத்தால் ஜாதகத்தில் அரிய செல்வம் ராஜயோகம் உருவாகி இருப்பதால் 3 ராசிகளுக்கும் அதிஷ்ட நட்சத்திரம் அடுத்த ஒரு மாதத்திற்கு அதிகமாக இருக்கும். 

மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பிறகு குருவால் அதிசய நிகழ்வு.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்

தன ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

தன ராஜயோக பலன்களால் அடுத்த ஒரு மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் கேரியர் உச்சத்தில் இருக்கும். தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் அடைவார்கள். இந்த நேரத்தில் தனது சகோதர சகோதரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் போட்ட திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு உண்டாகும். செல்வத்தைப் பெருக்க சிறந்த முதலீடுகளைச் செய்ய முடியும்.

துலாம்

தன ராஜயோகம் மூலம், உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கப் போகிறது. உங்களின் புதிய வேலைகளைத் தொடங்கலாம். கர்மாவை வழங்குபவரான சனி தேவன், உங்கள் ஜாதகத்தின் ஐந்தாவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கி சிக்கிக் கொண்டார். அதேசமயம் புதன் பகவான் உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இந்த இரண்டின் சேர்க்கையால் உங்கள் பிள்ளைகளிடமிருந்தும் நல்ல செய்திகளைப் பெறலாம்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் வந்துவிட்டது. வேலை மாற நினைப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் புதிய வேலைக்கான ஆஃபர் லெட்டர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தாயின் பழைய நோயிலிருந்து படிப்படியாக விடுபடத் தொடங்குவார். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்துடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கன்னியில் அஸ்தமாகும் செவ்வாய்! காரியத்தில் கண்ணாய் இல்லாவிட்டால் 5 ராசிகளுக்கு ஆப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News