செவ்வாய் பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகத்தால் 3 ராசிகள் வாழ்வில் முன்னேற்றம், சுகபோகம்

Mahalakshmi Rajayogam: ரிஷப ராசியில் செவ்வாயும் சந்திரனும் இணைவதால் ராஜயோகம் உண்டாகும். இந்த மஹாலக்ஷ்மி ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2023, 04:07 PM IST
  • செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும்.
  • நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும்.
  • பண பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
செவ்வாய் பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகத்தால் 3 ராசிகள் வாழ்வில் முன்னேற்றம், சுகபோகம்  title=

ரிஷப ராசியில் மகாலக்ஷ்மி ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றங்கள் சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம், தைரியம், துணிச்சல், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகிறார். 

செவ்வாய் பெயர்ச்சியாகி ரிஷப ராசியில் நுழைவார். மறுபுறம், பிப்ரவரி 26 அன்று, சந்திரனும் கோச்சாரம் ஆகி ரிஷப ராசிக்குள் நுழைவார். இப்படி ரிஷப ராசியில் செவ்வாயும் சந்திரனும் இணைவதால் ராஜயோகம் உண்டாகும். இந்த மஹாலக்ஷ்மி ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இவர்களுக்கு திடீரென்று அதிக பணம் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும், சுகபோகமும் உண்டாகும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு மஹாலக்ஷ்மி ராஜயோகம் பலம் தரும்

மேஷம்: 

செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும். பண பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பயணங்களால் நன்மை உண்டாகும். மார்க்கெட்டிங் மற்றும் சுற்றுலா பயணங்களில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Astro Tips: உங்கள் குழந்தை தேர்வுகளில் 100/100 வாங்கணுமா... ‘இவற்றை’ கடைபிடிங்க..!

ரிஷபம்: 

செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவதால், ரிஷப ராசியில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் பண பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஊடகம், திரைப்படம், கவர்ச்சி துறையுடன் தொடர்புடையவர்கள் பெரிய சாதனைகளை அடைய முடியும். புதிய வேலை கிடைக்கலாம். இந்த நேரத்தில் காதல் கைகூடும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கும் மகாலட்சுமி யோகம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். முதலீடு செய்ய இது மிகவும் ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் மாதம் சனி உதயம்: சுத்தமா நல்லா இல்ல... இந்த ராசிகள் சூதானமா இருக்கணும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News