சனி பெயர்ச்சி 2024: சனி அருளால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், சனி உதயத்தால் மகிழ்ச்சி, லாபம்

Sani Peyarchi Palangal 2024: கும்பத்தில் சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 20, 2024, 03:34 PM IST
  • சனி உதயத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
  • வருமானம் கூடும்.
  • மேஷ ராசிக்காரர்கள் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவார்கள்.
சனி பெயர்ச்சி 2024: சனி அருளால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், சனி உதயத்தால் மகிழ்ச்சி, லாபம் title=

Sani Peyarchi Palangal 2024: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய அசைவுகளும் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களும் பல வித மாற்றங்களை மேற்கொள்கின்றன. ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இப்படி பல மாற்றங்கள் கிரகங்களில் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது. சில ராசிகளுக்கு இவற்றால் சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் கிரகமான சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். தற்போது அவர் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். சமீபத்தில் சனி பகவான் கும்பத்தில் உதயமானார். கும்பத்தில் சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இவர்கள் மகிழ்ச்சியின் உச்சம் தொடுவார்கள். அனைத்து வித வெற்றிகளும் இவர்களை தேடி வரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

சனி உதயத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும், வருமானம் கூடும். சனி பகவானின் உதயத்தால், மேஷ ராசிக்காரர்கள் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவார்கள். அலுவலக பணிகளில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பல வித நன்மைகளை செய்வார். இவர்களது நிதி நிலை வலுவடையும். இந்த காலத்தில் கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். மேஷ ராசிக்காரர்களின் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தின் தாக்கத்தால் தொழில் நிலை சிறப்பாக இருக்கும். தொழில் துறையில் உங்களுக்கு பொன்னான பல வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் பலன் இப்போது முழுமையாக கிடைக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மற்றும் பிற நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

மேலும் படிக்க | ரங்பாரதி ஏகாதசி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பண வரவு அதிகரிக்கும்!

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் உதயத்தால் பல வித சாதகமான பலன்கள் கிடைக்கப் போகிறன. இந்த நேரத்தில் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் நல்ல பலனைத் தரும். இந்த ராசி மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் பொன்னான வாய்ப்பைப் பெறப்போகிறார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்து வருமானம் கூடும். சமூகத்தில் சனி பகவானின் அருளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

துலாம் (Libra)

சனிபகவானின் உதயத்தின் காரணமாக, துலா ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருகும் துலா ராசிக்காரர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். இதனால் ஆதாயம் கிடைக்கும். இது வணிகத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்னும் 6 நாட்களின் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News