புதன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பண வரவு, வெற்றி மேல் வெற்றி

Budhan Vakra Peyarchi Palangal: புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2024, 08:24 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி தொழில் மற்றும் வியாபாரத்தில் பல வித நன்மைகளை அளிக்கும்.
  • சொந்தமாக தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
  • இந்த நேரத்தில் வருமானம் அதிகமாவதுடன் சேமிப்புக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
புதன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பண வரவு, வெற்றி மேல் வெற்றி title=

Budhan Vakra Peyarchi Palangal: ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசிகளையும், இயக்கங்களையும், நிலைகளையும் மாற்றவுள்ளன. சில கிரகங்களின் வக்ர பெயர்ச்சியும், அஸ்தமன நிலைக்கான மாற்றமும் நடக்கவுள்ளன. இந்த மாற்றங்களின் பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இவற்றால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும், சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உருவாகும். 

ஏப்ரல் 2 ஆம் தேதி, அதாவது இன்று கிரகங்களின் இளவரசரான புதன் பிற்பகல் 3:18 மணிக்கு மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில் செல்வ வளம் பெருகும், மகிழ்ச்சி அதிகரிக்கும், லாபம் பன்மடங்காக உயரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதன் வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகள்

மிதுனம் (Gemini)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசியில் புதனின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கும்.  இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், நல்ல காலம் ஆரம்பம்

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி தொழில் மற்றும் வியாபாரத்தில் பல வித நன்மைகளை அளிக்கும். சொந்தமாக தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வருமானம் அதிகமாவதுடன் சேமிப்புக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகமாகும். நிதி நிலை நன்றாக இருக்கும்,.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் காணலாம். இந்த காலத்தில் செய்யப்படும் அனைத்து பணிகளும் எதிர்காலத்தில் ஆதாயமான பலன்களை அள்ளித்தரும். வியாபாரத்தில் வெற்றிகள் குவியும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

மீனம் (Pisces)

மேஷ ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி நடப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும், அதனால் நிதி நிலைமை வலுவடையும். வருமானம் அதிகரிப்பதால் சேமிப்பும் அதிகரிக்கும். கடின உழைப்பின் பலன் இப்போது கிடைக்கும். வாழ்வில் பல வித நன்மைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள், பிற உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும், ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏப்ரலில் சூரியன் குரு சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை கொட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News