தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், மகிழ்ச்சி பெருகும்

Solar Eclipse 2022: சூரிய கிரகணம் அனைத்து ராசிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும். இது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 04:33 PM IST
  • மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் பலன் பெறலாம்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும்.
  • இதன் மூலம், பல வகையான பணிகளும் நிறைவடையும்.
தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், மகிழ்ச்சி பெருகும் title=

சூரிய கிரஹன் 2022, ராசிகளில் அதன் விளைவு: தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 25 அன்று, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் ஒரு பகுதி/பிரிவு சூரிய கிரகணமாக இருக்கும். இது தீபாவளிக்கு அடுத்த நாள் வருவதால், இதன் ஜோதிட முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இந்த சூரிய கிரகணம் அனைத்து ராசிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும். இது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

செவ்வாய் அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த கிரகணம் துலாம் ராசியில் நடக்கவுள்ளது. சூரியனைத் தவிர, சுக்கிரன், கேது, சந்திரன் ஆகிய கிரகங்களும் கிரகண நேரத்தில் துலாம் ராசியில் இருக்கும். இந்த காரணத்தினால், இந்த சூரிய கிரகணம் சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் தற்போது நடந்து முடியும். அனைத்து பணிகளிலும் வெற்றி உண்டாகும். வாகனங்கள், நிலம், கட்டிடங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது அவை நிறைவேறும்.

மேலும் படிக்க | சனி பகவானின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும், செல்வம் பெருகும் 

மீனம்: 

மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் பலன் பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். இதன் மூலம், பல வகையான பணிகளும் நிறைவடையும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த சூரிய கிரகணம் மங்களகரமானதாக அமையப் போகிறது. பல வழிகளில் பணம் பெறுவார்கள். இந்த நேரத்தில் பணியிடம், வியாபாரம் என அனைத்திலும் முன்னேற்றம் காணலாம். நீங்கள் முன்னர் செய்திருந்த முதலீட்டின் முழுமையான பலன் இப்போது கிடைக்கும். அதிகப்படியான லாபம் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தந்தேரஸ் திருநாளில் இந்த 5 பொருட்களை வாங்கினால் வீட்டில் பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News